மனைவியை விருந்தினர்களுக்கு விருந்தாக்கும் கணவர்கள்...இந்த விசித்திரமான கலாச்சாரம் எங்கு தெரியுமா..?

By Kalai Selvi  |  First Published May 30, 2024, 3:15 PM IST

வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு மனைவியை கணவர்களே விருந்தாக்கும் பழக்கம் கொண்ட பழங்குடியின கிராமத்தை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
 


வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு மனைவியை கணவர்களே விருந்தாக்கும் பழக்கம் கொண்ட பழங்குடியின கிராமத்தை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாகவே, நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் மற்றும் அந்நியர்களை உணவு போட்டு உபசரிப்பது வழக்கம். ஆனால், இங்கு ஒரு கிராமத்தில் உணவோடு சேர்த்து மனைவியையும் விருந்தளிப்பார்களாம். இன்று வரை அந்த கிராமத்தில் இந்த பழமையான நடைமுறை தான் பின்பற்றி வருகின்றனர். நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள் இதுபோல இன்னும் பல ஆச்சரியமான சம்பவங்கள் இந்த கிராமத்தில் நடக்குமாம். எனவே, இப்போது இந்த கிராமத்தை பற்றி நாம் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..

Tap to resize

Latest Videos

நாம் தற்போது நவீன காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்கு பார்த்தாலும் உயரமான கட்டிடங்கள், பல விதமான அறிவியல் முன்னேற்றங்களை நம் கண்முன் இருக்கிறது. உலகம் எவ்வளவு தான் முன்னேறி இருந்தாலும் சில பழங்குடியினர்  கற்கால மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்களோ அதே போலவே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக, இன்னும் இவர்கள் தங்களது விதிகள், மரபுகள் மற்றும் வாழ்க்கை முறைகள், பழக்கவழக்கங்களை கடைப்பிடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தங்கையை திருமணம் செய்யும் அண்ணன்... விசித்திரமான பாரம்பரியம்.. நம்ம இந்தியாவில் தான்!

ஹிம்பா பழங்குடியினர்:

அந்தவகையில், நமீபியா நாட்டில் ஹிம்பா என்ற பழங்குடியினர் இன்னும் தங்களது பழக்கவழக்கங்கள் மாற்றாமல் அதை பின்பற்றி வருகின்றனர். இந்த பழங்குடியின மக்களின் எண்ணிக்கை மொத்தம்  50,OOO ஆகும். ஆனால், இன்னமும் இந்த ஹிம்பா பழங்குடியினரின் சில விதிகள் கேட்பதற்கு விசித்திரமாகவும் நம்மை ஆச்சிரியமடையவும் செய்யும். அது என்னவென்றால்...

இதையும் படிங்க:  ஏழு நாள் திருவிழா.. சரியான துணையை தேர்ந்தெடுக்க திருமணத்திற்கு முன்பே உடலுறவு - வினோத பழங்குடி மக்கள்!

விருந்தினர்களுக்கு மனைவியே விருந்து:

நமீபியா நாட்டில் இந்த ஹிம்பா பழங்குடியினர் தங்கள் முழு நாளையும் உணவைத் தேடியே செலவழிக்கிறார்கள். அதுபோல, இவர்களுக்கு குளிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால், தண்ணீரில் குளிப்பதற்கு பதிலாக புகையில் இவர்கள் குளிக்கிறார்கள். இது 'புகை குளியல்' என்று அழைக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, இந்த பழங்குடியினருக்கு ஒரு தனித்துவமான பாரம்பரியம் ஒன்று உள்ளது. அது என்னவென்றால், வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு உணவோடு மனைவியையும் விருந்தாக கணவரே உபசரிக்கும் பாரம்பரியம் ஒன்று உள்ளது. இதற்காக அவர்கள் வீட்டில் தனி அறை ஒன்றும் வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!