Sri lanka Economic Crisis: இலங்கையில் நீடிக்கும் பதற்றம்... புதிய பிரதமராக பதவியேற்றார் ரணில் விக்கிரமசிங்க!!

By Narendran S  |  First Published May 12, 2022, 7:38 PM IST

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகிய நிலையில் ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பதிவியேற்றர். 


இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகிய நிலையில் ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பதிவியேற்றர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தை தொட்டது. இதை அடுத்து அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசை பதவி விலக வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்தப் போராட்டம் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து வரும் நிலையில் இலங்கையில் மீண்டும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த சில வாரங்களாக அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும் என மக்கள் வீதியில் இறங்கி போராடி வந்தனர். இந்த நிலையில் இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Latest Videos

undefined

இதனிடையே போராட்டகரர்களின் அழுத்தத்திற்கு பணிந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இந்த நிலையில் கொழும்பில் உள்ள ராஜபக்சே கட்சி அலுவலகத்துக்கு கிளர்ச்சியாளர்கள் தீ வைத்தனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கலவரத்தில் ஆளும்கட்சியின் எம்.பி  ஒருவர் உயிரிழந்தார். இலங்கை தலைநகர் கொழும்புவை தொடர்ந்து பல்வேறு நகரங்களில் கலவரம் வெடித்தது. இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வன்முறை சம்பவங்களால் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிரான பொதுமக்களின் கோபம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அம்பன்தோட்டாவில் உள்ள மகிந்த மற்றும் கோத்தபய ராஜபக்சேவின் பரம்பரை வீட்டை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர்.

இலங்கை முழுவதும் போராட்டங்கள், வன்முறைகள் தீவிரமடைந்த நிலையில் தனியார் மற்றும் பொது சொத்துகளை சேதப்படுத்தினால் சுட்டுத்தள்ள முப்படைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், இலங்கை முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, அதிபர் கோட்டாபயவை சந்தித்துப் பேசினார். பிரதமர் நியமனம் தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியானது. ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் பெரும்பாலானோர் விக்கிரசிங்கவுக்கு ஆதரவு அளிப்பதாகவும் தகவல் வெளியானது. புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்கக்கூடும் என இலங்கை அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகிய நிலையில் ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பதிவியேற்றர். ரணில் விக்ரமசிங்கே  ஏற்கனவே 5 முறை இலங்கையின் பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!