சிங்கப்பூரில் லாரியில் இருந்து விழுந்த தமிழர் ராமலிங்கம் முருகன்; ரூ. 60.86 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!!

By Dhanalakshmi G  |  First Published Aug 28, 2023, 11:06 AM IST

சிங்கப்பூரில் வேலைக்கு சென்று கொண்டு இருந்தபோது லாரியில் இருந்து கீழே விழுந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் நிறுவன உரிமையாளருக்கு எதிராக வழக்கு தொடுத்து அதில் வெற்றியும் பெற்றார். 


சிங்கப்பூரில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் பல்வேறு பணிகளில் உள்ளனர். அதிகார மட்டத்தில், ஐடி தொழில், வர்த்தகம் என்று இருந்தாலும், பலர் கீழ்நிலை தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாதிரியான தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டு இருப்பார்கள். அங்கிருந்து பின்னர் லாரிகளில் பணியிடங்களுக்கு ஏற்றிச் செல்லப்படுவார்கள். இதுதான் சிங்கப்பூரின் நடைமுறை.

உலகிலேயே பணக்கார நாடு, தூய்மையான நாடு என்று பெயர் பெற்ற சிங்கப்பூரில் சமீப காலங்களில் புலம்பெயர்ந்த ஊழியர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. பணியிடங்களுக்கு ஊழியர்களை லாரியில் ஏற்றிச் செல்கின்றனர். இதனால் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக் கொள்ளும் அவலம் ஏற்படுகிறது. 

Tap to resize

Latest Videos

இப்படித்தான் கடந்த 2021ஆம் ஆண்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் மற்ற ஊழியர்களுடன் பணிக்கு லாரியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, சக ஊழியர் ஒருவர் தனக்கு இடம் வேண்டும் என்ற நோக்கத்தில் ராமலிங்கத்தை தள்ளியுள்ளார். அப்போது மழையும் பெய்து கொண்டுள்ளது. தள்ளிய வேகத்தில் ராமலிங்கம் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். இதில் ராமலிங்கத்திற்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. 

சிங்கப்பூரில் மலிவு விலையில் iPhone விற்பனை! போலியானதா என சந்தேகத்தில் ஒருவர் கைது!

உடனடியாக மருத்துவமனைக்கு ராமலிங்கம் எடுத்து செல்லப்பட்டார். பரிசோதித்ததில் வலது கால் முழங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. இதைத் தொடர்ந்து அவர் ஐந்து மாதங்கள் பணிக்கு செல்ல முடியவில்லை. ஓய்வில் இருந்தார். 

இதைத் தொடர்ந்து இவர் பணியாற்றிய ரைகல் மரைன் சர்வீசஸ் மீது ஒரு லட்சம் சிங்கப்பூர் டாலர் இழப்பீடு கேட்டு மாவட்ட நீதிமன்றத்தில் ராமலிங்கம் வழக்கு தொடுத்தார். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 60 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் கேட்டு இருந்தார். விபத்து நடக்கும்போது ரைகல் மரைன் சர்வீசஸ் நிறுவனத்தில் ராமலிங்கம் கப்பல் பெயின்டராக பணிபுரிந்து வந்துள்ளார்.  

சிங்கப்பூர் அதிபர் தேர்தல்.. குறிப்பிட்ட வாக்குகள் பெறாவிட்டால் 24 லட்சம் காலி - வியக்க வைக்கும் சிங்கை ரூல்ஸ்

ஆனால், நீதிமன்றத்தில் ராமலிங்கத்தின் குற்றச்சாட்டுக்களை ரைகல் மரைன் சர்வீசஸ் மறுத்தது. லாரியில் இருந்து இறங்கும்போது ராமலிங்கம் விழுந்து விட்டார் என்று தெரிவித்து இருந்தது. ஆனால், நீதிமன்றம் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. ராமலிங்கத்திற்கு ஆதரவாக கடந்த வியாழக் கிழமை மாவட்ட நீதிபதி டான் மே டீ தீர்ப்பு வழங்கினார். ராமலிங்கத்திற்கு இழப்பீடாக ரைகல் மரைன் சர்வீஸ் நிறுவனம் 60 லட்சத்து 86 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

உலகின் பணக்கார மற்றும் மிகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் மோசமான பணிச் சூழல், சாலை விபத்துகள் காரணமாக தொழிலாளர்கள் உயிரிழப்பதில் முன்னிலையில் உள்ளது. பெரும்பாலான விபத்துக்கள் தொழிலாளர்கள் தங்கி இருக்கும் இடத்தில் இருந்து பணிக்கு லாரிகளில் வரும்போது ஏற்படுகிறது என்பது தெரிய வந்துள்ளது. 

ஏப்ரல் 2021 ஆம் ஆண்டில், 17 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரி எக்ஸ்பிரஸ்வேயில் டிரக் மீது மோதியது. இதில், ஒரு இந்தியர் உட்பட இருவர் உயிரிழந்தனர். கடந்த ஜூலை மாதம், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற இரண்டு லாரிகள் மோதியதில் 26 ஆண்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!