#UnmaskingChina: இனி செத்தான் சீனாக்காரன்...!! இறங்கி அடிக்க ராணுவத்துக்கு உத்தரவு போட்ட ராஜ்நாத் சிங்..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 22, 2020, 10:37 AM IST
Highlights

கிழக்கு லடாக் எல்லையில் 20 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்துள்ள நிலையில், இனி சீன ராணுவம் எடுக்கும் அத்தனை நடவடிக்கைகளுக்கும் பொருத்தமான பதிலடி கொடுக்குமாறு இந்திய ராணுவத்திற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

கிழக்கு லடாக் எல்லையில் 20 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்துள்ள நிலையில், இனி சீன ராணுவம் எடுக்கும் அத்தனை நடவடிக்கைகளுக்கும் பொருத்தமான பதிலடி கொடுக்குமாறு இந்திய ராணுவத்திற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை  உயர் ராணுவ  அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த மே-22 ஆம் தேதி பாங்கொங் த்சோ மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா அத்துமீறியதாக கூறி  சீனா எல்லையில் ராணுவத்தை குவித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள இருநாடுகளும் முன்வந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திங்கட்கிழமை (ஜூன்-15)  இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை  இந்தியப் படையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதில் 20 இந்திய  ராணுவவீரர்கள் உயிரிழந்தனர். 

45 ஆண்டுகளில் இல்லாத வகையில் எல்லையில் சீனர்களுடன் போராடி இத்தனை எண்ணிக்கையில் இந்திய ராணுவவீரர்கள்  வீரமரணம் அடைந்தது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அதேபோல் சீன தரப்பிலும் சுமார் 35 பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. உயிரிழப்புகள் ஏற்பட்டதை ஒப்புக்கொண்ட சீனா, எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதை கூற மறுத்துள்ளது. இந்நிலையில் எல்லையில் இந்தியா பாதுகாப்பை அதிகரித்து வருகிறது, ஏராளமான படைகளை எல்லையில் குவித்து வருகிறது, ராணுவத் தளவாடங்கள் மற்றும் போர் விமானங்கள் எல்லையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.   இந்நிலையில் கிழக்கு லடாக் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நிலைமை குறித்து விவாதிக்க மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், ராணுவ தலைமை தளபதி  எம்.எம் நாரவனே, கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங், விமானப்படை தலைவர் மார்ஷல் ஆர் கே எஸ் பதாவ்ரியா  ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

அப்போது எல்லையில் சீனா கூடுதல் படைகளை குவித்து வருகிறது என படைத்தளபதிகள் ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்தனர், அதற்கு, இந்திய எல்லையில் இதுநாள்வரை கடைப்பிடித்து வந்த ஒப்பந்தத்தில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் நெருக்கடியான சூழ்நிலையில் இந்திய ராணுவ வீரர்கள் துப்பாக்கியை பயன்படுத்தலாம்  என ராணுவத்திற்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது,   அதேநேரத்தில் சீனாவிடமிருந்து ஏதேனும் நடவடிக்கை இருந்தால் அதற்குபொருத்தமான பதிலடி வழங்க ராணுவத்திற்கு  அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள முப்படைகளும் தயாராக உள்ளது என ராணுவ தளபதிகள் ராஜ்நாத் சிங்கிடம் உறுதியளித்தனர். அதற்கு,  சீனா ஆட்சேபித்ததாக கூறப்படும் கிழக்கு லடாக்கில் உட்கட்டமைப்பு பணிகள் தொடரும் என்றும், படைகள் நிலத்திலும், கடலிலும், ஆகாயத்திலும் விழிப்புடன் இருக்க வேண்டுமென ராஜ்நாத் சிங் மீண்டும் தளபதிகளை கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் லடாக் மட்டுமல்லாது சீனாவுடன் பகிரப்படும் சுமார் 3 ஆயிரத்து  488 கிலோமீட்டர் பரப்பளவில் எந்த பகுதியிலும் எல்லா சூழ்நிலையிலும் தயாராக இருக்க வேண்டும் என ராஜ்நாத் சிங், படைகளைக் கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல் சீன ராணுவத்திற்கு இணையாக  இந்தியாவும் துருப்புகளை முன்னோக்கி நகர்த்தி அனைத்து வகையிலும்  ராணுவ வலிமையை இந்தியா அதிகரித்துள்ளது என முப்படைகள் சார்பில் பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!