இலங்கையில் கொட்டத்தை அடக்க பிரபாகரன் வரவேண்டும்... புத்த பிக்குவின் அதிரடி ஏக்கம்..!

By Thiraviaraj RM  |  First Published May 2, 2019, 4:51 PM IST

இலங்கையில் உள்ள முஸ்லீம் இனவெறியர்களின் கொட்டத்தை அடக்க பிரபாகரன் மீண்டும் வரவேண்டும் என புத்த பிக்கு மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 
 


இலங்கையில் உள்ள முஸ்லீம் இனவெறியர்களின் கொட்டத்தை அடக்க பிரபாகரன் மீண்டும் வரவேண்டும் என புத்த பிக்கு மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறுகையில், “நான் கடந்த 30 வருடங்களாக நடந்த போரை நன்கு அறிந்த பிக்கு. விடுதலைப்புலிகளின் காலத்திலேயே நான் இங்கு இருந்தேன். அப்போது வாகரை, கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளுக்கும் சென்றுள்ளேன். அங்கு சென்று விகாரைகளை சீரமைக்க புலிகளிடமிருந்து பல உதவிகளை பெற்றேன்.

Latest Videos

அப்போது என்னை யாரும் விரல் நீட்டி பேசியதில்லை. என்னை யாரும் அச்சுறுத்தியதில்லை. தற்போதுள்ள அரசியல் தலைவர்கள்- தமிழ் தலைவர்கள் உட்பட- என் மீது பல குற்றச்சாட்டுக்களை வைக்கிறார்கள். போர்க்காலத்தில் கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான சிங்கள, தமிழ் மக்களுக்கு நிலங்கள் கிடைக்கவில்லை. அடிப்படை வசதிகள் எதுவுமின்றி பல தமிழ்மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இவற்றை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க பலமுறை ஆட்சியாளர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டுள்ளேன். அப்போது, தமிழ்மக்களின் தலைமைகள் என சொல்லிக்கொள்ளும் அரசியல் தலைவர்கள், இது இனத்துவேசம் என்றார்கள். மட்டக்களப்பின் எல்லை கிராமமான புனானையில் மூன்று மக்களும் கல்வி கற்க திறந்தவெளி பல்கலைகழகம் ஒன்று, ஹிஸ்புல்லாவினால் அமைக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலத்தை தமிழ்மக்களுக்கு வழங்காமல் எப்படி திறந்தவெளி பல்கலைகழகம் அமைக்க அரசு அனுமதித்தது?தமிழ் மக்களின் பிரதிநிதி என கூறும் வடக்கு முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனாலும் இதை நிறுத்த முடியுமா? புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இந்த கட்டடம் கட்டப்பட்டிருக்குமா? கிழக்கு பறிபோயிருக்குமா? நாட்டில் சுபீட்சம் ஏற்பட மீண்டும் பிரபாகரன் வர வேண்டுமா? என எண்ணத் தோன்றுகிறது’’ என அவர் தெரிவித்துள்ளார். 

click me!