சிதறி கதற வைத்த வெடிகுண்டுகள்... புதிய அமைப்பை களமிறக்கும் இலங்கை அரசு..!

By Thiraviaraj RMFirst Published Apr 29, 2019, 4:39 PM IST
Highlights

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் தொடர்ந்த தற்கொலை தாக்குதலை அடுத்து தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக இலங்கையின் தீவிர நடவடிக்கையில், உலகநாடுகளின் புலனாய்வு அமைப்புக்கள் இலங்கை அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், புதிய புலனாய்வுத்துறை அமைப்பு ஒன்றை உருவாக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.  அதாவது முப்படைகளின் புலனாய்வுத்துறை மற்றும் அரசின் புலனாய்வுத்துறை என்பதையும் தாண்டி, இந்தியாவின் "ரா" அமைப்பை போன்று இந்த புலனாய்வு அமைப்பு அமையவுள்ளது. கடந்த வாரம் இலங்கையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களை அடுத்து இலங்கை அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அடுத்து அமையவுள்ள புதிய புலனாய்வு அமைப்பின் மூலம் நாட்டு நடப்பு பற்றிய தகவல்களை திரட்டி, எதிர்காலத்தில் அவற்றின் தாக்கம், தீர்வுகள் குறித்த கணிப்புக்களை அரசு பாதுகாப்புத்துறைக்கு கொடுக்கும் என இலங்கையின் உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

click me!