நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பரபரப்பு

By Ganesh A  |  First Published Mar 16, 2023, 8:54 AM IST

நியூசிலாந்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கெர்மாடெக் தீவில் இன்று காலை திடீரென ஏற்பட்ட நில அதிர்வை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.


நியூசிலாந்து நாட்டில் உள்ள கெர்மாடெக் தீவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது. கெர்மாடெக் தீவு நியூசிலாந்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. இன்று காலை அங்கு திடீரென ஏற்பட்ட நில அதிர்வை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.

கடந்த மாதம் துருக்கி மற்றும் சிரியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதேபோல் அங்குள்ள கட்டிடங்கள் பெரும்பாலானவை இடிந்து சின்னாபின்னமானது. இதையடுத்து உலக நாடுகள் அனைத்தும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... அண்டார்டிகாவில் உடைந்து மிதக்கும் ராட்சத பனிப்பாறை! லண்டன் நகரைவிட பெருசு!

இந்தநிலையில், நியூசிலாந்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் தற்போது அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நியூசிலாந்தில் ஆயிரத்திற்கு மேல் நிலநடுக்கங்கள் ஏற்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... H1-B விசாவில் பணிபுரியும் இந்திய ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

click me!