அண்டார்டிகாவில் இருந்து 1550 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட மாபெரும் பனிப்பாறை ஒன்று உடைந்து கடலில் மிதக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் அண்டார்டிகாவில் இருந்து உடைபட்டுப் பிரிந்த மாபெரும் பனிப்பாறையின் படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை ஆராய்ச்சியாளர்கள் முதன்முறையாக வெளியிட்டுள்ளனர். A81 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பனிப்பாறை அண்டார்டிகாவின் ப்ரண்ட் என்ற பகுதியில் இருந்து பிரிந்து கிட்டத்தட்ட 150 கிலோமீட்டர் தொலைவுக்கு மிதந்து சென்றுள்ளது.
இந்த A81 பனிப்பாறை பிரிட்டனில் தலைநகர் லண்டனைவிட அதிக பரப்பளவு கொண்டது. இதன் அளவு தோராயமாக 1550 சதுர கிலோமீட்டர் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். வலுவான நீரோட்டங்களால் தொடர்ந்து முன்னகர்ந்து வரும் இந்த ராட்சத பனிப்பாறை வெட்டெல் கடலை அடையக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Rishi Sunak: பிரதமரே இப்படி பண்ணலாமா? நாயை திரியவிட்ட ரிஷி சுனக்கை கண்டித்த போலீஸ்
அண்டார்டிகாவில் உள்ள ஹாலே ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே (பிஏஎஸ்) அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் இந்த ராட்சத பனிப்பாறை வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
அண்டார்டிகாவில் உள்ள ப்ரண்ட் பனிப்பிராந்தியம் உலகம் முழுதும் உள்ள ஆராய்ச்சியாளர்களால் மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் உறைபனிப் பிரதேசங்களில் ஒன்றாகும். காலநிலை மாற்றம் காரணமாக பனிப்பிரதேசங்கள் தொடர்ந்து வேகமாக உருகிவரும் சூழலில் பிரிட்டன் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள A 81 பனிப்பாறையின் படங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
உறைபனியில் உள்ள அண்டார்டிகாவில் பனிப்பாறை உடைந்து நகர்வது இயற்கையாக எப்போதும் நடக்கக்கூடியதுதான். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தப் பகுதியில் இருந்து இரண்டாவது முறையாக இவ்வளவு பிரம்மாண்டமான பனிப்பாறை ஒன்று உடைப்பட்டு மிதக்கத் தொடங்கியுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். 2021ஆம் ஆண்டு மே மாதம் A76a என்ற பிரம்மாண்ட பனிப்பாறை உடைந்து கடலில் மிதந்து தெற்கு ஜார்ஜியாவை நோக்கி சென்றது.
புக்கர் பரிசு நெடும்பட்டியலில் எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'பூக்குழி' நாவல்