அருணாசலப்பிரதேசம் இந்தியாவுக்கு சொந்தமானது; சீனாவுக்கு எதிராக அமெரிக்க செனட்டில் தீர்மானம் நிறைவேற்றம்!!

By Dhanalakshmi G  |  First Published Mar 15, 2023, 11:17 AM IST

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான மக்மோகன் லைனை அமெரிக்க நாடாளுமன்றம் அங்கீகரித்ததுடன், அருணாசலப்பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதி என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.


அதேசயம், இந்தியாவுக்கும் மட்டுமின்றி பசிபிக் பகுதிகளுக்கும் சீனா அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளது. இதுகுறித்து தீர்மானத்தில் குறிப்பிட்டு இருக்கும் செனட்டர் ஜெப் மெர்க்லே மற்றும் செனட்டர் பில் ஹகெர்டி, ''இந்திய பசிபிக் பகுதிகளுக்கு சீனா அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இது அமெரிக்காவுக்கு மிகவும் அச்சுறுத்தலானது. இந்த நேரத்தில் இந்த பிராந்தியத்தில் நட்பு நாடுகளுடன் அமெரிக்கா உறவுடன் இருக்க வேண்டியது அவசியம். அதுவும் இந்தியாவுடன் நட்புடன் இருக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தீர்மானத்தின் மூலம், இந்தியாவின் ஒரு பகுதியாக அருணாசலப்பிரதேசம் மீண்டும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான ஆக்கிரமிப்பு மூலம் எல்லையை மாற்றுவதற்கு சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதற்கு ராணுவத்தை பயன்படுத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், குவாட் அமைப்பு மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான இந்தியா பசிபிக் உறவை மேலும் மேம்படுத்த உதவுகிறது என்று தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளனர். 

Tap to resize

Latest Videos

இன்று கைதாகிறார் பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கான்? வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!

கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே அருணாசலப்பிரதேச எல்லையில் மோதல் நீடித்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், மீண்டும் இந்தியாவின் ஒருபகுதிதான் அருணாசலப்பிரதேசம் என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் அமெரிக்கா இந்த தீர்மனாத்தைக் கொண்டு வந்துள்ளது.

ராணுவத்தைக் கொண்டு எல்லையை மாற்றுவது, ஆக்ரமித்த இடத்தில் கிராமங்களை நிர்மாணிப்பது, பின்னர் மாண்ட்ரின் மொழியில் கிராமங்களுக்கு பெயர் சூட்டுவது, அந்தப் பெயர்களை வரைபடம் மூலம் வெளியிடுவது போன்ற சீன அரசாங்கத்தின் செயல்பாடுகளை அமெரிக்கா கடுமையாக கண்டித்து தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது. 

சீனாவின் அச்சுறுத்தல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளை அமெரிக்கா வரவேற்றுள்ளது. மேலும், சீனாவுக்கு எதிராக தொலைதொடர்பு கட்டமைப்புகளை பாதுகாப்பது, கொள்முதல் மற்றும் விநியோக நடைமுறைகளை பரிசோதித்தல், முதலீடுகளை தொடர்ந்து கண்காணித்தல், சுகாதாரம் மற்றும் மற்ற துறைகளில் தைவானுடன் இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் அமெரிக்கா தனது தீர்மானத்தின் மூலம் பாராட்டியுள்ளது.

இந்தத் தீர்மானம் பாதுகாப்பு, தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகளை  அமெரிக்க-இந்தியா இடையிலான இருதரப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த உதவுகிறது. மற்றும் தென்கிழக்கு நட்பு நாடுகளுடன் இணைந்து குவாட் மற்றும் கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டின் மூலம் இந்தியாவுடனான நமது பலதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துகிறது. 

ஒரே ஒரு வழக்கு! ஜெர்மனியில் பெண்களுக்கு கிடைத்த நிர்வான சுதந்திரம்!

click me!