பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை மார்ச் 16 வரை கைது செய்ய தடை விதித்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவரது வீட்டின் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான், நீதித்துறையை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இம்ரான்கான், வழக்கத்திற்கு மாறாக அந்நாட்டு ராணுவத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் வைத்து வந்தார். அதன்மூலம் அவரது ஆட்சி கவிழ்நது. ஒருமுறை இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. அதிர் அவர் லேசன காயங்களுடன் உயிர் தப்பினார். தொடர்ந்து அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரச்சார பேரணியின் போது, பாகிஸ்தான் நீதிபதி ஜெபா சவுத்ரி மற்றும் போலீஸ் அதிகாரிகளை இம்ரான்கான் மிரட்டியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் விலக்கு கேட்டு வந்தார். அதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த போதும் அவர் நீதிம்ன்றத்திற்கு வரவில்லை. இந்நிலையில், குடிமையியல் நீதிபதி ராணா முஜாஹித் ரஹீம் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளார். அதில், இம்ரான்கான் விசாரணைக்கு ஆஜராகததால் ஜாமீனில் வெளிவரமுடியாத கைது வாரண்டை பிறப்பித்துள்ளார்.
கடந்த வாரமே இம்ரான்கான் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், மார்ச் 14 அன்று கைது செய்யப்படுவார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தனர். ஆனால், போலீசாருக்கும், கலவரக்காரர்களுக்கும் இடைய மோதல் ஏற்பட்டதால் இம்ரான்கானை கைது செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில், இம்ரான்கானை நாளை (மார்ச் 16) வரை கைது செய்ய தடை விதித்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் பாக்கிஸ்தானில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. லாகூரில் உள்ள இம்ரான் கான் வீட்டைச்சுற்றி போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.