விலைவாசி உயர்வுக்கு எதிராக மக்கள் போராட்டம்...! போலீசார் துப்பாக்கி சூடு..! ஒருவர் பலி..இலங்கையில் பதற்றம்

By Ajmal Khan  |  First Published Apr 20, 2022, 8:32 AM IST

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.


விலைவாசி உயர்வால் மக்கள் பாதிப்பு

1948 இல் சுதந்திரத்திற்குப் பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில்  இலங்கை சிக்கி தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இலங்கை அதிபர்  கோத்தபய ராஜபக்‌ஷே பதவி விலகக் கோரி பல வாரங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது, கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு இலங்கை முழுவதும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் தன்னிச்சையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.   கோபமடைந்த பல்லாயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் டயர்களை எரித்து தலைநகருக்குச் செல்லும் முக்கிய சாலையை மறித்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

போலீசார் துப்பாக்கி சூடு- ஒருவர் பலி

மத்திய இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து 95 கிமீ தொலைவில் உள்ள ரம்புக்கனாவில் கடுமையான எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை  மக்கள் நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போராட்டம் நடைபெற்ற நெடுஞ்சாலை மத்திய நகரான கண்டியை தலைநகர் கொழும்புடன் இணைக்கிறது. இலங்கை முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோல்  மற்றும் டீசல் தீர்ந்து போனதால் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக  ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில்  ஒருவர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளனர். அரசுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியதால் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த நேரிட்டதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து அந்த பகுதியில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்துப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா கண்டனம்

இந்தநிலையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், தனது டுவிட்டர் பதிவில்  இலங்கையில்  நிலவும் மோசமான நிலைமை குறித்து கவலை அளிப்பதாக தெரிவித்தார். "ரம்புக்கனவில் இருந்து வெளியாகும் செய்தியால் மிகவும் வருத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். போராட்டக்காரர்கள் அல்லது காவல்துறையினருக்கு  எதிரான எந்தவொரு வன்முறையையும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் இது கண்டிக்க தக்கது என கூறியுள்ளார். எனவே இந்த நேரத்தில் அனைத்து தரப்பிலும் நிதானமாகவும் அமைதியாகவும் செயல்படுமாறு கேட்டுக்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.


 

click me!