kabul blast : ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் ஆண்களுக்கான பள்ளிக்கூடத்தில் இன்று குண்டு வெடித்ததில் 6 மாணவர்கள் உடல்சிதறி பலியாகினர், 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் ஆண்களுக்கான பள்ளிக்கூடத்தில் இன்று குண்டு வெடித்ததில் 6 மாணவர்கள் உடல்சிதறி பலியாகினர், 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து காபூல் காவல்துறை செய்தித்தொடர்பாளர் காலித் ஜாத்ரன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ காபூல் நகரில் உள்ள அப்துல் ரஹிம் சாஹித் பள்ளிக்கூடத்தில் இன்று அடுத்தடுத்து சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மாணவர்கள் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே செல்லும்போது இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது.”எனத் தெரிவித்துள்ளார்
undefined
தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் பணியாற்றும் பத்திரிகையாளர் இஷானுல்லா அம்ரி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ காபூலில் உள்ள தஸ்தே பட்சே பகுதியில் உள்ள ஆண்கள் பள்ளியில் மனிதவெடிகுண்டு ஒருவர் சென்று தாக்குதல் நடத்தியிருக்கலாம். ஷியா பிரிவினருக்கு சொந்தமான பள்ளிக்கூடம் என்பதால் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம்.
அப்துல் ரஹிம் சாஹித் பள்ளிக்கூடத்தில் பிரதான வாயிலில் மாணவர்கள் வெளியேறுமபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் கூட்டமாக நின்றிருந்தபோது குண்டுவெடித்ததாக அங்கிருந்த ஆசிரியர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனத் அந்த ஆசிரியர் தெரிவித்தார்” எனத் தெரிவித்துள்ளார்.
காபூலில் உள்ள டோலோ நியூஸ் கூறுகையில் “ இந்த குண்டுவெடிப்புக் குறித்து உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது.விரைவில்விவரங்கள் பகிரப்படும்” எனத் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை.
காபூலின் மேற்குப் பகுதியில் இன்றுகாலை 2 வெடிகுண்டுகள் வெடித்துள்ளன. இந்த குண்டுவெடிப்பை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில் முதல் குண்டு அரசு பயிற்சு மையத்துக்கு அருகேயும், 2-வது குண்டு அப்துல்ரஹிம் பள்ளியின் முன்பும் வெடித்தது. 3-வது குண்டு காபூலின் ஆங்கிலம் கற்பிக்கும்மையத்தின் அருகே நடந்துள்ளது என டோலோ செய்திகள் தெரிவிக்கின்றன
2021 மே மாதம் இதேபோன்று பள்ளியின் முன் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 85 மாணவிகள் கொல்லப்பட்டனர், 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான்களுக்கும், ஐஎஸ் கோர்ஸன் பிரிவுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது , இந்த தாக்கலுக்கு ஐஎஸ் கோர்ஸன் பிரிவு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது