கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பிறந்த ஆண் குழந்தை இறந்தது... சோகத்தில் ரசிகர்கள்

Published : Apr 19, 2022, 08:39 AM ISTUpdated : Apr 19, 2022, 08:44 AM IST
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பிறந்த ஆண் குழந்தை இறந்தது... சோகத்தில் ரசிகர்கள்

சுருக்கம்

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பிறந்த ஆண் குழந்தை இறந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

இரட்டை குழந்தையை ஆவலுடன் எதிர்பார்த்த  ரொனோல்டோ

மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானா ரொனால்டோவுக்கு கிறிஸ்டியானோ ஜூனியர், மேடியோ என்ற 2 மகன்களும் ஈவா மற்றும் அலனா என்ற 2 மகள்களும் உள்ளனர். ரொனால்டோவின் மனைவி ஜெர்ஜினா ரோட்ரிக்ஸ் மீண்டும் கர்ப்பமாக இருந்தார். இரட்டைக் குழந்தைகள் பிறக்க உள்ளதாக  கடந்த ஆக்டோபர் மாதம் ரொனால்டோ சமூக வலை தளம் மூலம் தெரிவத்திருந்தார். இந்தநிலையில் தங்களுக்கு பிறந்த இரட்டை குழந்தையில் ஆண் குழந்தை இறந்துவிட்டதாக நேற்று ரொனால்டோ தெரிவித்துள்ளார். அதே வேளையில்  பெண் குழந்தை நலமாக இருப்பதகாவும் கூறியுள்ளார்.

ஆண் குழந்தை இறந்தது

எந்தவொரு பெற்றோரும் உணரக்கூடிய மிகப்பெரிய வலியை தற்போது உணர்ந்துள்ளதாக ரொனோல்டோ கூறியுள்ளார்.  பெண் குழந்தை பிறந்தது மட்டுமே இந்த தருணத்தில் ஓரளவு நம்பிக்கையுடனும்  வாழ வலிமை அளிப்பதாக தெரிவித்துள்ளார். தனது மனைவிக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கவனிப்பு மற்றும் ஆதரவிற்காக நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார். இந்த இழப்பிற்கு தாங்கள் மிகப்பெரிய பேரழிவிற்கு ஆளாகியுள்ளதாக கூறியுள்ளார். எனவே இந்த கடினமாக நேரத்தில் தனிமையை விரும்புவதாக ரொனால்டோ மற்றும் ரோட்ரிக்ஸ் ஆகியோர் கூட்டாக கையொப்பமிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.  இந்தநிலையில் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணி சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த இரண்டு குழந்தைகளில் ஒருவர் மரணம் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியும் தங்களது சோகத்தில் இணைவதாக  அறிக்கையில் தெரிவித்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை.. இந்தியா-ரஷ்யா உறவு பற்றி புடின் உறுதி!
நண்பேன்டா.. ரஷ்ய அதிபர் புடினை விமான நிலையத்துக்கே சென்று வரவேற்ற பிரதமர் மோடி!