Russia War: ரஷ்யாவும் உக்ரைனும் அடித்துக்கொண்டால் இனி இது நடக்கும்..அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஐ.நா..

By Thanalakshmi V  |  First Published Apr 18, 2022, 12:48 PM IST

உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக 1.7 பில்லியன் மக்கள் வறுமை, பசி, பட்டினி போன்ற சூழலுக்கு தள்ளப்படுவார்கள் என்று ஐ.நா எச்சரித்துள்ளது. மேலும் உலகில் ஐந்தில் ஒருவர் வறுமைக்கு தள்ளப்படலாம் என்று ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. 
 


ஐ.நா எச்சரிக்கை:

உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக 1.7 பில்லியன் மக்கள் வறுமை, பசி, பட்டினி போன்ற சூழலுக்கு தள்ளப்படுவார்கள் என்று ஐ.நா எச்சரித்துள்ளது. மேலும் உலகில் ஐந்தில் ஒருவர் வறுமைக்கு தள்ளப்படலாம் என்று ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்ரேஸ்," உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால், உக்ரைன் கடும் சேதங்களை கண்டுள்ளது. ஆனால் ,இந்த போர் வளர்ந்த நாடுகள் மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார். 

Tap to resize

Latest Videos

ஐந்தில் ஒருவர் வறுமை:

உக்ரைன் - ரஷ்யா போரினால் அண்மையில் ஏற்படாத புதிய அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் உக்ரைன் மற்றும் ரஷ்யாவும் உலகில் கோதுமை உற்பத்தியில் 30% பங்கு கொண்டுள்ளது. அதேபோல் பார்லியும் உக்ரைன், ரஷ்யாவில் தான் அதிகமாக உற்பத்தியாகிறது. மக்காச்சோள உற்பத்தியில் உக்ரைன் உலகளவில் 5-வது இடத்தில் உள்ளது. சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் பாதிக்கும் மேல் உக்ரைனில் தான் உருவாகிறது . எனவே இந்தத் தாக்குதலில் உலகின் 5-ல் ஒருவர், அதாவது 1.7 பில்லியன் மக்கள் வறுமை, பசி, பட்டினி போன்ற சூழலுக்கு தள்ளப்படுவார்கள் என்று ஐ.நா பொதுசெயலாளர் கூறினார்.

உக்ரைன் - ரஷ்யா போர் நீடித்தால்:

உலகில் வளர்ச்சி குன்றிய நாடுகளில் 45 நாடுகள் ரஷ்யா, உக்ரைன் கோதுமையையே நம்பியுள்ளன. இந்நிலையில் இந்தப் போர் நீடித்தால் உலகில் 5ல் ஒருவர் உணவுக்கு வழியில்லாமல் வறுமைக்கு தள்ளப்படலாம் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.இந்த போரினால் உலகளவில் 143 நாடுகளின் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படும் என்றும் சர்வதேச ஜிடிபியில் 86% இந்த நாடுகள் தான் ஆதிக்கம் செலுத்துவதால்,அவர்களின் பொருளாதார குறியீடுகள் சரிவது உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறியுள்ளார்.

சரணடைய மாட்டோம்..கடும் தாக்குதல்:

இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா 53 நாட்களைக் கடந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கிழக்கு உக்ரைன் பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள, ரஷ்ய படைகள் அங்கு துறைமுக பகுதியான மரியுபோல் நகரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. இந்நிலையில் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்தியில்,‘‘மரியுபோல் நகரில் உள்ள உக்ரைன் வீரர்கள், ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைந்தால், அவர்களின் உயிர்களுக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். சரணடைய மறுத்து தொடர்ந்து சண்டையிட்டால், முற்றிலும் அழித்துவிடுவோம்’’ என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதனிடையே மரியுபோல் துறைமுகத்தில் சிக்கியுள்ள உக்ரைன் வீரர்கள் நகரை முற்றுகையிட்டு ரஷியப் படைகளால் கொல்லப்பட்டால், ரஷியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் இருந்து விலகுவோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். மேலும் மரியுபோலில் ரஷ்ய படைகளை எதிர்த்து எஃப்கு ஆலையில் உக்ரைன் படையினர் கடுமையாக போராடி வருகின்றனர்.

மேலும் படிக்க: Russia- Ukraine War: உக்ரைன் வீரர்கள் ஒன்று சரணடையனும்.. இல்லைனா சாகனும்..ரஷ்யா மிரட்டல்..

click me!