Singapore News : நேற்று நவம்பர் 2, 2023 அன்று சிங்கப்பூரின் Blk 63 Lorong 5 Toa Payohல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (SCDF), நேற்று இரவு 9 மணியளவில் ஒரு யூனிட்டில் தீ பற்றி எறிவது குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக கூறியுள்ளது.
சிங்கப்பூரில் கடந்த சில ஆண்டுகளாக மின் சாதனங்களை கவனிக்காமல் விடுவதால் ஏற்படும் தீ விபத்துகள் அதிகரித்து வருவதாக அரசு மக்களை பல முறை எச்சரித்து வருகின்றது. ஆனால் தற்போது மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் சிங்கப்பூரில் நடந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று சிங்கப்பூர் Blk 63 Lorong 5 Toa Payoh பகுதியில் உள்ள குடிருப்பின் 6வது மாடியில் PMA சார்ஜிங் செய்தபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூர் SCDF அளித்த தகவலின்படி, தாங்கள் சம்பவ இடத்திற்கு விரைவதற்கு முன்பாகவே தீ பற்றியெரிந்த வீட்டில் இருந்த நான்கு பேரு அங்கிருந்து வெளியேறிவிட்டதாக கூறினார்.
undefined
Singapore Life | மகிழ்ச்சியில்லாத பணக்கார நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் பணக்காரர்கள் முதலிடம்!
அந்த வீட்டின் லிவிங் ரூம் பகுதியில் இருந்த தீயை பிஷன் தீயணைப்பு நிலையத்தின் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். பாதிக்கப்பட்ட பிரிவில் இருந்து இரண்டு பேர் கேகே பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டனர் என்றும் SCDF வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவரின் கூற்றுப்படி, அந்த வீட்டில் சூழ்ந்த புகைமண்டலத்தால் அதை சுவாசித்த ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும், அந்த நபர் எரியும் வீட்டிற்கு நேராக மேலே உள்ள வீட்டில் வசித்து வந்தவர் என்றும் அவர் கூறினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் நிலை குறித்து தகவல் வெளியாகவில்லை.
முதற்கட்ட விசாரணையில், அறையில் சார்ஜ் செய்து கொண்டிருந்த பெர்சனல் மொபிலிட்டி எய்ட் (பிஎம்ஏ) பேட்டரி பேக்கில் இருந்து தீ ஏற்பட்டிருக்கலாம் என SCDF தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் போர்; ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை வழங்கும் ரஷ்யாவின் வாக்னர் குரூப்!!