வங்கதேசத்திற்கு இந்திய பிரதமர் மோடி சுற்றுப்பயணம் சென்றுள்ள நிலையில், வங்கதேசத்தின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் குறித்து எழுதிய கட்டுரை, வங்கதேச பத்திரிகையில் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்திற்கு இந்திய பிரதமர் மோடி சுற்றுப்பயணம் சென்றுள்ள நிலையில், வங்கதேசத்தின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் குறித்து எழுதிய கட்டுரை, வங்கதேச பத்திரிகையில் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தின் 50வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வங்கதேசம் சென்றுள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. பிரதமர் மோடிக்கு தலைநகர் டாக்காவில் சிவப்பு கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவுடன் இணைந்து பங்கபந்து-பாபு அருங்காட்சியகத்தை இன்று மாலை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
வங்கதேச பயணத்தையொட்டி, வங்கதேசத்தின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானை புகழ்ந்து பிரதமர் மோடி எழுதிய கட்டுரை, வங்கதேச பத்திரிகையில் வெளிவந்தது.
பிரதமர் மோடி எழுதிய அந்த கட்டுரையில், ஆகஸ்ட் 1975ல் ஒரு இருண்ட காலையில், பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானும் அவரது குடும்பத்தினரும் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். வங்கதேச சுதந்திரத்தின் ஆதாயங்களை மாற்றியமைக்க விரும்பினர், பங்கபந்துவின் கொலையாளிகள். அதற்கு எதிராக பங்கபந்து ஒரு வீரப் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். அமைதியான மற்றும் இணக்கமான துணைக் கண்டத்தை கட்டமைக்கும் பங்கபந்துவின் கனவுக்கு மரண அடி கொடுக்க அவர்கள் விரும்பினர்.
பங்கபந்துவின் வாழ்க்கையே போராட்டக்களமாக இருந்ததையும், மோசமான அடக்குமுறைகள், மிருகத்தனங்கள் ஆகியவற்றையெல்லாம் எதிர்கொண்டபோதிலும், கொஞ்சம் கூட அசராமல் நிலைத்து நின்று போராடியதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, பங்கபந்துவின் பலத்தின் ஆதாரமாக பங்கமாதா ஷேக் பாசிலத்துன்னேசா திகழ்ந்ததையும் சுட்டிக்காட்டினார்.
சொந்த கொள்கைகளின் மீதான நம்பிக்கை மற்றும் மாற்றுக்கருத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஆகியவற்றின் கலவையாக திகழ்ந்ததால் தான், சமகாலத்தின் தலைசிறந்த அரசியல் தலைவராக பங்கபந்து திகழ்வதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா - வங்கதேசம் இடையேயான 2015 நில எல்லை ஒப்பந்தத்தின் மூலம் வரலாற்று சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டது. நவீன தேசிய அரசுகளின் வரலாற்றில் இது ஒரு வரலாற்று தருணம். ஆனால் பங்கபந்து இருந்திருந்தால், இந்த சாதனை மிகவும் முன்னதாக நடந்திருக்கலாம். அது நடந்திருந்தால், இருநாடுகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சி இன்னும் அதிகமாகயிருந்திருக்கும்.
அவரது தொலைநோக்கு உலக பார்வையுடன், பங்கபந்து எங்கள் துணைக் கண்டத்திற்கு இன்னும் பெரிய ஒன்றைக் கனவு காணத் துணிந்திருப்பார் என்று நான் நம்புகிறேன் என்று எழுதியிருக்கிறார் பிரதமர் மோடி.
‘Imagining a different South Asia with Bangabandhu’...
Sharing my piece, published in the in which I pay tributes to Bangabandhu and recall his insightful thoughts on various subjects. https://t.co/UnxXhYjFf7
வங்கதேசத்தின் சிறந்த நட்பு நாடாக இந்தியா தொடர்ந்து நடைபோடும். இருநாடுகளின் கோல்டன் எதிர்காலம், பங்கபந்து, லட்சக்கணக்கான வங்கதேசத்தினர் மற்றும் இந்தியர்களின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பால் தொடரும்.
வங்கதேச சுதந்திர தின கொண்டாட்ட விழாவில் கலந்துகொள்வது பெருமையாக இருக்கிறது. பங்கபந்துவின் கனவை நானும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் நிறைவேற்றுவோம் என்று பிரதமர் மோடி எழுதியிருக்கிறார்.