வரலாற்று சம்பவம்: சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு சென்ற பிரதமர் மோடி… மரபை விலக்கி கொண்ட பப்புவா நியூ கினியா!!

By Narendran S  |  First Published May 21, 2023, 7:13 PM IST

பப்புவா நியூ கினியாவின் பிரதமர் பொதுவாக சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு எந்த வெளிநாட்டு விருந்தினரையும் வரவேற்பதில்லை. இது அவர்களின் பாரம்பரியம். ஆனால் இந்த பாரம்பரியத்தை இந்திய பிரதமர் மோடிக்காக அவர் தளர்த்தியுள்ளார். 


பப்புவா நியூ கினியாவின் பிரதமர் பொதுவாக சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு எந்த வெளிநாட்டு விருந்தினரையும் வரவேற்பதில்லை. இது அவர்களின் பாரம்பரியம். ஆனால் இந்த பாரம்பரியத்தை இந்திய பிரதமர் மோடிக்காக அவர் தளர்த்தியுள்ளார். மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்று, இங்கு பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு பப்புவா நியூ கினியாவுக்கு புறப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை மாலை தாமதமாக வந்தார். பப்புவா நியூ கினியாவில் இந்தியப் பிரதமரை வரவேற்க ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன.

இதையும் படிங்க: பீகாரை சேர்ந்தவர் அடித்து கொலை… கேரளாவில் நிகழ்ந்த பயங்கர சம்பவம்!!

Latest Videos

undefined

பிரதமரை வரவேற்க, அந்நாட்டு அரசு பல நெறிமுறைகளை உடைத்து அறிவித்தது. பப்புவா நியூ கினியாவின் பிரதமர் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு முதல் முறையாக வெளிநாட்டு விருந்தினரை வரவேற்றார். பப்புவா நியூ கினியா (பிஎன்ஜி) பிரதமர் ஜேம்ஸ் மாரப் விமான நிலையத்தில் அவரை வரவேற்க நேரில் வந்தார். இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பப்புவா நியூ கினியா பிரதமர் மோடியின் பாதங்களைத் தொட்டு ஆசி பெற்றார்.

இதையும் படிங்க: கர்நாடக தேர்தலில் கலைந்த கனவுகளும் பூனையாக மாறிய சிங்கமும்!

பொதுவாக, பப்புவா நியூ கினியா பிரதமர் பொதுவாக சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு எந்த வெளிநாட்டு விருந்தினரையும் வரவேற்பதில்லை. இது அவர்களின் பாரம்பரியம். ஆனால் இந்தியப் பிரதமருக்கு, இங்குள்ள பிரதமர் அலுவலகத்திற்கு இந்த விழாவில் விலக்கு அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு பப்புவா நியூ கினியாவில் இந்தியப் பிரதமர் வரவேற்கப்படுவார். பிரதமர் மோடிக்கு 19 துப்பாக்கி குண்டுகள் முழங்க சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. 

click me!