ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி, ஷ்லோஸ் எல்மாவ் நகரில் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷால்ஸை சந்தித்தார்.
ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி, ஷ்லோஸ் எல்மாவ் நகரில் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷால்ஸை சந்தித்தார். ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி, முனிச்சில் உள்ள ஸ்க்லோஸ் எல்மாவ் நகரில் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று பிரதமரின் பயணத் திட்டம் தெரிவித்திருந்தது. ஜேர்மன் அதிபருடனான சந்திப்பிற்குப் பிறகு, சிறந்த எதிர்காலத்தில் முதலீடு செய்தல்: காலநிலை, ஆற்றல், ஆரோக்கியம்" என்ற தலைப்பில் ஒரு முழுமையான அமர்வு இருக்கும். குறிப்பாக, பிரதமர் மோடியின் ஜெர்மனி பயணம் ஜி7 தலைவர்கள் மற்றும் கூட்டாளர் நாடுகளுடனான சந்திப்புகளுடன் நிரம்பியுள்ளது.
மேலும் படிக்க: பிரதமர் மோடியுடன் ஜி7 நாடுகளின் தலைவர்கள்… உச்சி மாநாட்டிற்கு முன்னதாக ஒரு கிளிக்!!
மேலும் சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி முதல் பயங்கரவாத எதிர்ப்பு வரையிலான பிரச்சினைகள் குறித்து விவாதங்களை நடத்துகிறது. இதனிடையே பிரதமரின் பயணத்திட்டத்தில் தெரிவித்தப்படி, பிரதமர் மோடி, இன்று ஸ்க்லோஸ் எல்மாவில் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷால்ஸை சந்தித்தார். ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி ஷ்லோஸ் எல்மாவ் நகரில் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷால்ஸை சந்தித்தார். உலகளவில் உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடியுடன் புவிசார் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்திய உக்ரைன் நெருக்கடியில் G7 உச்சிமாநாட்டின் கவனம் செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
ஜெர்மனியில் ஜி7 உச்சி மாநாட்டில், பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் மற்றும் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ pic.twitter.com/86sZ0P4f69
— Asianetnews Tamil (@AsianetNewsTM)மேலும் படிக்க: ஓடி வந்து கைக்கொடுத்த அமெரிக்கா அதிபர்… மாஸ் காட்டிய பிரதமர் மோடி… ஜெர்மனியில் சுவாரஸ்யம்!!
தனது பயணத்திற்கு முன்னதாக, பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், சுகாதாரம் மற்றும் பாலின சமத்துவம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்த விவாதங்களில் பங்கேற்பதாக தெரிவித்திருந்தார். மேலும் உச்சிமாநாட்டின் அமர்வுகளின் போது, சுற்றுச்சூழல், ஆற்றல், காலநிலை, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், பயங்கரவாத எதிர்ப்பு, பாலின சமத்துவம் மற்றும் ஜனநாயகம் போன்ற பிரச்சினைகள் குறித்து G7 நாடுகள், G7 கூட்டாளி நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வேன் என்றும் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.