இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் உலகம் முழுவதும் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளதாக ஜெர்மனி வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் உலகம் முழுவதும் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளதாக ஜெர்மனி வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி7 அமைப்பின் மாநாடு ஜெர்மனியில் ஜூன் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கிறார். இதற்காக அவர் நேற்று புறப்பட்டு இன்று ஜெர்மனி சென்றடைந்தார். இந்த நிலையில் அவர், முனிச் பகுதியில் ஜெர்மனி வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இந்திய சமூகத்தின் மிகப்பெரிய கூட்டமாக இது இருக்கும். இந்தியர்களாகிய நாம் நமது ஜனநாயகம் குறித்து பெருமை கொள்கிறோம். ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா தான் என்று நாம் இன்று பெருமையுடன் கூறலாம். கலாசாரம், உணவு, ஆடைகள், இசை மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றில் உள்ள பன்முகத் தன்மைதான் நமது ஜனநாயகத்தை துடிப்புடன் வைத்திருக்கிறது. இந்திய ஜனநாயக அரசியல் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி அவசர நிலை.
மோடி... மோடி... கரகோஷத்தால் அதிர்ந்தது ஜெர்மனி!! pic.twitter.com/yXkRqsS1QR
— Asianetnews Tamil (@AsianetNewsTM)இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள்:
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் உலகம் முழுவதும் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. கிட்டத்தட்ட 90 சதவீத இந்தியர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட குறைந்தபட்சம் 10-15 ஆண்டுகள் ஆகும் என்று மக்கள் கூறிய அதே இந்தியா இதுதான். இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆவதைக் குறிக்கும் வகையில் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் கொண்டாடப்படுகிறது. உலகின் மிகப்பெரிய சக்திகள் எப்படி நம்முடன் தோளோடு தோள் இணைந்து நடக்க விரும்புகின்றன என்பதை இந்தியா பார்த்துக் கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க: இந்திய ஜனநாயக வரலாற்றில் அவசர நிலை ஒரு கரும்புள்ளி… பிரதமர் மோடி பரபரப்பு கருத்து!!
இந்திய ஏற்றுமதி அதிகரிப்பு:
ஏற்றுமதியில் இந்தியா மைல்கல்லை எட்டியுள்ளது. உலகம் நம்மை நம்பிக்கையுடன் பார்க்கிறது என்பதை இது காட்டுகிறது. அடுத்த ஆண்டு எங்கள் ஏற்றுமதி இலக்குகளை இன்னும் அதிகரிக்க விரும்புகிறோம். அதை அடைய நீங்கள் எங்களுக்கு உதவலாம்.
முகம் மலர வரவேற்ற ஜெர்மனி வாழ் இந்தியர்கள்… புன்னகையுடன் கையசைத்த பிரதமர் மோடி!! pic.twitter.com/DiSSikL2wQ
— Asianetnews Tamil (@AsianetNewsTM)இந்திய தொழில்நுட்பம்:
ஹோத்தா ஹை', 'சல்தா ஹை (அது நடக்கும், இப்படித்தான் நடக்கும்) மனநிலை இந்தியாவின் கடந்த காலம். அது மாறி, 'கர்ணா ஹை', 'கர்னா ஹி ஹை', 'சமய் பே கர்னா ஹை' (அதைச் செய்ய வேண்டும், சரியான நேரத்தில் செய்ய வேண்டும்) என்பது புதிய கொள்கை. ஐ.டி., டிஜிட்டல் தொழில்நுட்பத்தில், இந்தியா புதிய மைல்கற்களை எட்டுகிறது.
மேலும் படிக்க: ஒருபக்கம் பவேரியன் பேண்ட்.. மறுபக்கம் வானவில்.. பிரதமர் மோடிக்கு முனிச்-இல் உற்சாக வரவேற்பு..!
இன்று, டேட்டா நுகர்வில் இந்தியா புதிய சாதனைகளை படைத்து வருகிறது. உலகிலேயே மொபைல் இன்டர்நெட் டேட்டா மிகவும் மலிவானதாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் உள்ளது. அரசாங்கம் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது - நில வரைபடத்தில் ட்ரோன் பயன்படுத்தப்படும் உரிமைத் திட்டம். ஒவ்வொரு மாதமும் சராசரியாக 5,000 காப்புரிமைகள் தாக்கல் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் 500 க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன, இப்போது கிட்டத்தட்ட 18 லட்சம் வீடுகளுக்கு குழாய் நீர் இணைப்பு உள்ளது. இந்தியர்களின் சாதனைகளைப் பற்றி நான் தொடர்ந்து பேசினால், அது உங்கள் இரவு உணவைத் தாண்டிவிடும் என்று தெரிவித்தார்.
மோடி... மோடி... கரகோஷத்தால் அதிர்ந்தது ஜெர்மனி!! pic.twitter.com/yXkRqsS1QR
— Asianetnews Tamil (@AsianetNewsTM)