பிரதமர் மோடி இன்று சவுதி அரேபியா செல்கிறார்! பட்டத்து இளவரசருடன் சந்திப்பு! முழு பயண விவரம் இதோ!

Published : Apr 22, 2025, 08:22 AM IST
பிரதமர் மோடி இன்று சவுதி அரேபியா செல்கிறார்! பட்டத்து இளவரசருடன் சந்திப்பு! முழு பயண விவரம் இதோ!

சுருக்கம்

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று சவுதி அரேபியா புறப்பட்டு செல்கிறார். பிரதமரின் முழு பயண விவரத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

PM Modi Saudi Arabia  visit: பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று (ஏப்ரல் 22) சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டு செல்கிறார். சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த சந்திப்பின்போது இருவரும் இரு நாட்டு உறவுகள், பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

சவுதி அரேபியா பயணத்தின்போது இந்திய வம்சாவளியினரை சந்தித்து பேசும் பிரதமர் மோடி, தொழில் அதிபர்களுடனும் ஆலோசனை நடத்துகிறார். 

பிரதமர் மோடியின் பயண விவரம் இதோ: 

செவ்வாய், ஏப்ரல் 22, 2025

காலை 0900 மணி IST: பிரதமர் மோடி டெல்லி பாலம் விமானப்படை நிலையத்தில் இருந்து ச‌வூதி அரேபியாவின் ஜெட்டாவிற்கு விமானத்தில் புறப்படுகிறார். 

சவூதி அரேபிய உள்ளூர் நேரம் 1240 மணி: பிரதமர் மோடியின் விமானம் ஜெட்டா சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றடைகிறது. 

உள்ளூர் நேரம் 1325 மணி: ஹோட்டல் ரிட்ஸ் கார்ல்டனுக்கு பிரதமர் சென்றடைகிறார். 

உள்ளூர் நேரம் 1700-1730 மணி: ஹோட்டல் ரிட்ஸ் கார்ல்டனில் இந்திய வம்சாவளியினரை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். 

உள்ளூர் நேரம் 1830-2130 மணி: சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

Pope Francis: போர் இல்லா உலகத்தை விரும்பிய சமாதான புறா! யார் இந்த போப் பிரான்சிஸ்? அடுத்த போப் யார்?

இது மூன்றாவது முறை 

பிரதமர் மோடி சவுதி அரேபியாவுக்கு செல்வது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்பாக கடந்த 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் சவுதி அரேபியாவுக்கு மோடி சென்றிருக்கிறார். ஆனால் அவர் இந்த இரண்டு முறையும் ரியாத் நகருக்கு சென்றிருந்தார். ஆனால் இந்த முறை ஜெட்டா நகருக்கு செல்ல இருக்கிறார். பிரதமர் மோடி ஜெட்டா நகருக்கு செல்வது இதுவே முதன்முறையாகும். 

முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து 

பிரதமர் மோடியின் சவுதி அரேபிய பயணம் குறித்து சவுதி அரேபியாவிற்கான இந்திய தூதர் சுஹேல் அஜாஸ் கான் கூறுகையில், ''இந்தியாவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே ஒரு மூலோபாய கூட்டாண்மை கவுன்சில் உள்ளது. எனவே, இரு தலைவர்களும், பிரதமர் மோடி மற்றும் பட்டத்து இளவரசரும் மூலோபாய கூட்டாண்மை கவுன்சில் கூட்டத்திற்கு தலைமை தாங்க உள்ளனர். அப்போது ஏராளமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட உள்ளன'' என்றார். இந்த சந்திப்பின்போது இருவரும் பொருளாதார கூட்டாண்மை, பாதுகாப்பு கூட்டாண்மை தொடர்பான பல விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளனர் என்றும் சுஹேல் அஜாஸ் கான் தெரிவித்துள்ளார். 

போப் பிரான்சிஸ் காலமானார்: வாடிகன் சேனலில் அதிகாரபூர்வ அறிவிப்பு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கு மேலே பவருக்கு வந்த அசிம் முனீர்..! டம்மியாக்கப்பட்ட ஷாபாஸ் ஹெரீப்..!
இந்தியாவின் எதிரி..! இனி ரஷ்யாவின் எதிரி.. இனி எவனும் வாலாட்ட முடியாது.. வேற லெவல்