PM Narendra Modi Speech in Ahlan Modi : இன்று மாலை அஹ்லான் மோடி நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பேச துவங்கிய பிரதமர் மோடி பாரத் மாதா கி ஜெய் என்ற முழக்கத்தோடு தனது உரையை முடித்துள்ளார். அவர் பேசிய உரையின் தொகுப்பு பின்வருமாறு.
"அதிபர் ஷேக் முகமது பின் சயீத் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உங்களை கவனித்துக்கொள்ளும் விதம் மற்றும் உங்கள் நலன்களில் அவர் அக்கறை காட்டும் விதம், என்னை பிரமிக்க வைக்கின்றது. அதனால்தான் அவருக்கு நன்றி தெரிவிக்க மக்கள் இங்கு வருகிறார்கள். ஐக்கிய அரபு அமீரகம் என்னை கௌரவித்ததை நான் பாக்கியமாக கருதுகிறேன்.
மிக உயர்ந்த குடிமகன் விருது, இது உங்கள் ஒவ்வொருவருக்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மரியாதை. நான் எனது சகோதரரான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரை சந்திக்கும் போதெல்லாம், அவர் உங்களையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வளர்ச்சிக்கு உங்கள் பங்களிப்பையும் பாராட்டுகிறார். கவலைப்பட வேண்டும்" என்று 'அஹ்லான் மோடி' நிகழ்ச்சியில் பிரதமர் கூறினார்.
"நான் ஒரு கோவிலை அமைக்க முன்மொழிந்தபோது, அவர் சற்றும் தயங்கவில்லை, உடனே அதற்கு சரி என்று கூறினார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் 6 மாதங்கள் தங்கிய முதல் ஐக்கிய அரபு எமிரேட் விண்வெளி வீரரை நான் வாழ்த்த விரும்புகிறேன் என்றார் மோடி. எங்கள் பந்தம் திறமை, புதுமை, கலாச்சாரம். கடந்த சில ஆண்டுகளில், நாங்கள் எங்கள் உறவுகளுக்கு ஊக்கத்தை அளித்துள்ளோம். எமிரேட்ஸைச் சேர்ந்த எனது நண்பர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்" என்று பிரதமர் கூறினார்.
"இன்று, 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே ஒவ்வொரு இந்தியனின் குறிக்கோளாகும். உலகில் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நாடு? அது நமது பாரதம் தான். உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளர் யார்? நமது பாரதம் தான். உலகின் 2வது பெரிய உற்பத்தியாளர் யார்? நமது பாரதம் தான். உலகில் முதல் முயற்சியில் செவ்வாய் கிரகத்தை அடைந்த நாடு எது? நமது பாரதம். உலகின் எந்த நாடு நிலவின் தென்துருவத்தை அடைந்தது? நமது பாரதம் என்று பெருமையோடு பேசினார் மோடி.
"இந்தியாவின் திறனை நான் நம்புகிறேன். மோடி தனது 3வது ஆட்சியில் இந்தியாவை உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக மாற்றுவேன் என்று உறுதியளித்துள்ளார். மோடியின் உத்தரவாதம் என்றால் அந்த உத்தரவாதம் முழுமைபெறும் உத்தரவாதம். சமீபத்தில் இந்தியா சென்றவர்கள், அது வளர்ந்து வரும் விதத்தை பார்க்க முடியும். இந்தியா வேகமாக மாறி வருகிறது. என்றார் மோடி.
"UPI சேவைகள் UAEயில் விரைவில் தொடங்கும், இது தடையற்ற கட்டண பரிவர்த்தனையை எளிதாக்கும் மற்றும் உங்கள் குடும்பத்திற்கு எந்த தொந்தரவும் இல்லாமல் பணத்தை அனுப்பலாம். இந்தியாவும் UAEயும் எங்கள் மீது உலகின் நம்பிக்கையை பலப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். நாங்கள் வெற்றிகரமான G20ஐ ஏற்பாடு செய்துள்ளோம்.
Overwhelmed by the affection at the community programme in Abu Dhabi.https://t.co/dZJ5oPz73R
— Narendra Modi (@narendramodi)உச்சிமாநாடு மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு பங்காளியாக அழைக்கப்பட்டது. உலகின் ஒவ்வொரு தளத்திலும் இந்தியாவின் குரல் ஒலிக்கிறது, நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் இந்தியாவிற்கும் உதவிக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், நீங்கள் பார்த்திருப்பீர்கள், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு நாங்கள் உதவி செய்துள்ளோம். உக்ரைன், சூடான் போன்ற நெருக்கடியில் அவர்கள் சிக்கித் தவிக்கும் போதெல்லாம், உதவியுள்ளோம் என்றார் அவர்.
இறுதியாக சில வார்த்தைகளை அரபியில் பேசியில் பிரதமர் மோடி, பாரத் மாதா கி ஜெய் என்று முழங்கி தனது உரையை முடித்துக்கொண்டார்.