Ahlan Modi Event : இரண்டு நாள் பயணமாக அபுதாபி சென்றுள்ள பிரதமர், தற்போது அஹ்லன் மோடி நிகழ்ச்சி பங்கேற்று மக்கள் மத்தியில் பேச துவங்கியுள்ளார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று பிப்ரவரி 13ம் தேதி மாலை அபுதாபியில் உள்ள சயீத் ஸ்போர்ட்ஸ் சிட்டி ஸ்டேடியத்தில் 'அஹ்லான் மோடி' நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினருடன் உரையாடுகிறார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர், ஆனால் அவர்களின் இதயங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
நான் எனது குடும்பத்தை சந்திக்க வந்துள்ளேன், நீங்கள் பிறந்த மண்ணின் மணத்தை உங்களுக்கு கொண்டு வர நான் வந்துள்ளேன். உங்கள் 140 கோடி உடன்பிறப்புகளின் செய்தியுடன் நான் இங்கு வந்துள்ளேன். மேலும் உங்களை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது என்பதே அந்த செய்தி. உங்களை நினைத்து பாரதம் பெருமைகொள்கிறது.
அபுதாபியில் முதல் இந்து கோவிலை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!!
என் மீதான உங்கள் அன்பு அசாத்தியமானது. இன்று என்னை இங்கு பார்க்க நேரம் ஒதுக்கினீர்கள், நான் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உங்கள் உற்சாகம், உங்கள் குரல் அபுதாபியில் எதிரொலிக்கிறது. இங்கு வந்ததற்கு நன்றி. எனது சகோதரர் ஷேக் முகமது பின் ஜாஹித் (யுஏஇ அதிபர்) அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர் இல்லாமல் இது சாத்தியமில்லை, அவர் என் மீது வைத்திருக்கும் மரியாதை எனக்கு ஒரு விலையுயர்ந்த உடைமை.
Overwhelmed by the affection at the community programme in Abu Dhabi.https://t.co/dZJ5oPz73R
— Narendra Modi (@narendramodi)2015ல், நான் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் சென்றபோது, இராஜதந்திர உலகம் எனக்குப் புதிது. விமான நிலையத்தில் என்னை அழைத்துச் செல்ல பட்டத்து இளவரசரும் ஜனாதிபதியும் வந்தனர். மக்களின் கண்களில் இருக்கும் அரவணைப்பும் மினுமினுப்பும் என்னால் மறக்க முடியாத ஒன்று. முதல் வருகையே நான் நெருங்கிப் பழகிய ஒருவரின் வீட்டிற்கு வந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது என்றார் பிரதமர் மோடி.
சகோதரர் ஷேக் முகமது பின் சயீத் இன்று கூட விமான நிலையத்தில் என்னை வரவேற்க வந்தார், ஒற்றுமையும் அரவணைப்பும் ஒரே மாதிரியாக இருந்தது, இது அவரை தனித்துவமாக்குகிறது. இந்தியாவில் 4 முறை அவரை வரவேற்றதில் பெருமை அடைகிறேன். நமது உறவுகள் நாளுக்கு நாள் வலுப்பெறுகின்றன.
கோவிட் சமயத்தில், இந்தியர்களை மீண்டும் அழைத்துகொள்கிறோம் என்று கூறினேன். ஆனால் அவர் கவலைப்பட வேண்டாம், தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ பராமரிப்புக்கான உள்கட்டமைப்பை நாங்கள் அமைத்துள்ளோம், அவற்றைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதியின் குஜராத் பயணத்தின் போது, புலம்பெயர்ந்த இந்தியர்களை அவர் கவனித்துக்கொண்ட விதத்திற்காக லட்சக்கணக்கான மக்கள் அவரை வரவேற்றனர் என்றார் பிறந்தார் மோடி அவர்கள்.