அப்போது அவரின் உருவம் பதித்த பட்டு சேலையை நெசவாளர்கள் காண்பித்தனர். அதனைக் கண்டு அதிபர் ஜி ஜின்பிங் ஸ்தம்பித்துப் போனார். இந்நிலையில் பரமக்குடியில் உள்ள மகாகவி பாரதியார் கூட்டுறவு நெசவாளர் சங்கத்தின் சார்பில் மோடி, ஜி ஜின்பிங் முகம் பதித்த 3டி பட்டு சேலையை உருவாக்கி சாதனை படைத்துள்ளன
தமிழகம் வருகை தந்திருந்த சீன அதிபர் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் இணைந்தபடி உள்ள புகைப்படத்தை 3டி முறையில் தமிழக விவசாயிகள் சேலையாக செய்துள்ளனர். இது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது கடந்த அக்டோபர் மாதம் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் இந்திய பிரதமர் மோடியும் சந்தித்து கொண்டனர். சீனாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தஅதிபர் ஜி ஜின்பிங் கிழக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழக பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதில் சீன அதிபர் நெகிழ்ந்து போனார்.
இதனையடுத்து சாலைமார்கமான அவர் மாமல்லபுரம் சென்றார், அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு இந்திய சிற்பக் கலைகளை கண்டு வியந்தார். அதனை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை மாமல்லபுரத்தில் நடைபெற்றது. பின்னர் கோவலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலைப் படைப்புகளை பார்வையிட்டார், அப்போது அவரின் உருவம் பதித்த பட்டு சேலையை நெசவாளர்கள் காண்பித்தனர். அதனைக் கண்டு அதிபர் ஜி ஜின்பிங் ஸ்தம்பித்துப் போனார். இந்நிலையில் பரமக்குடியில் உள்ள மகாகவி பாரதியார் கூட்டுறவு நெசவாளர் சங்கத்தின் சார்பில் மோடி, ஜி ஜின்பிங் முகம் பதித்த 3டி பட்டு சேலையை உருவாக்கி சாதனைபடைத்துள்ளனர்.
அதில் நேராகப் பார்த்தால் இரு நாட்டு தலைவர்களின் புகைப்படமும் பக்கவாட்டில் நின்று பார்த்தாள் மாமல்லபுரத்தின் சிற்ப கலைகளும் தெரியும் படியும் வடிவமைத்துள்ளனர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது, முகம் பதித்த சேலைகள் உருவாக்கப்படுவது தற்போது பேஷனாகி வரும் நிலையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 3டி முறையில் நெசவாளர்கள் தயாரித்துள்ள பட்டுச்சேலைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.