கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரம்... ரயில்கள் நேருக்கு நேர் மோதல்... 16 பேர் உயிரிழப்பு... 60 பேர் படுகாயம்..!

By vinoth kumar  |  First Published Nov 12, 2019, 11:12 AM IST

வங்கதேசத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். 60 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


வங்கதேசத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். 60 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Latest Videos

வங்கதேசத்தின் பிரம்மன்பாரியா மாவட்டத்தில் சிட்டகாங் செல்லும் உதயன் எக்ஸ்பிரஸ் ரயிலும், டாக்கா செல்லும் நிதிஷா எக்ஸ்பிரஸ் ரயிலும் மாண்டோபாக் ரயில்களில் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்து அதிகாலை நேரம் என்பதால் தூங்கி கொண்டிருந்த பயணிகள் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 60 பேர் படுகாயமடைந்தனர். 

விபத்து தொடர்பாக உடனே மீட்டு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்டு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனால் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!