அவர் சமீபத்தில் பயணம் மேற்கொண்டதில் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகித்தனர். அதேபோல் அவரை தொடர்ந்து விசாரித்ததில் டெங்குவால் பாதிக்கப்பட்ட பெண் நண்பருடன் அவர் உடலுறவு வைத்துக் கொண்டது தெரியவந்தது, இதனால் அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதும் தெரிந்தது.
கொசு கடித்தால் தான் டெங்கு காய்ச்சல் வரும் என்று அல்ல, கொசு கடிக்காமலும் டெங்கு காய்ச்சல் வருவதற்கு பல வாய்ப்புகள் உள்ளது என்ன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டெங்கு காய்ச்சல் கொசுக்கள் மூலம் பரவும் என்பது அனைவரும் அறிந்தது தான், குறிப்பாக தேங்கும் நன்னீரில் உருவாகும் ஏடிஎஸ் கொசுக்கள் மூலம் உயிரைப் பறிக்கும் அளவிற்கு காய்ச்சல் ஏற்படுகிறது. அத்துடன் இந்த காய்ச்சல் வந்தால் அதில் இருந்து தப்பிப்பது பெரும் பாடாகிவிடுகிறது. உடல்ரீதியாக பல பாதிப்புகளை அது உண்டாக்குகிறது. இந்நிலையில் இந்த டெங்கு காய்ச்சல் குறித்து ஸ்பெயினில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
அதில் வெளியாகும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. அதாவது ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 41 வயதுடைய ஆண் நபர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் வசிக்கும் பகுதியில் டெங்கு பாதிப்பு ஏதுமில்லை, இதனால், அவர் சமீபத்தில் பயணம் மேற்கொண்டதில் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகித்தனர். அதேபோல் அவரை தொடர்ந்து விசாரித்ததில் டெங்குவால் பாதிக்கப்பட்ட பெண் நண்பருடன் அவர் உடலுறவு வைத்துக் கொண்டது தெரியவந்தது, இதனால் அவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதும் தெரிந்தது. சமீபத்தில் அவர் கியூபா உள்ளிட்ட மேற்கு அமெரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார் அப்போது அவருக்கு இந்த காய்ச்சல் தொற்று ஏற்பட்டதாக தெரிய வந்தது
இதன் மூலம் அவரது மனைவிக்கும் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதாவது கொசு கடிப்பதினால் மட்டும் டெங்கு வருவதில்லை, டெங்கு பாதிப்பு உள்ளவருடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டாலும் டெங்கு பரவும் என அந்நாட்டு பொதுச் சுகாதாரத்துறை உறுதிசெய்துள்ளது குறிப்பிடதக்கது.