1990களில் தலிபான்கள் ஆதிக்க சக்தியாக இருந்தபோதும்கூட பாஞ்ஷிரை அவர்களால் நெருங்க இயலவில்லை.
தலிபான்களுக்கு அடிபணிய மறுக்கும் பாஞ்ஷிர் பள்ளத்தாக்கில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிக் எமிரேட் முஜாகிதீன் படையினர் ஆயுதங்களுடன் காத்திருப்பதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
ஆப்கனின் வடகிழக்குப் பகுதியில் உள்ள பாஞ்ஷிர் பள்ளத்தாக்கு போராளிகளின் கோட்டையாகக் கருதப்படுகிறது. 1990ம் ஆண்டுகளில் ஆதிக்கம் செலுத்திய தலிபான்களால் கூட பாஞ்ஷிரை நெருங்க முடியவில்லை. இந்த நிலையில் தற்பொழுது காபூலை கைப்பற்றியுள்ள தலிபான்கள் தங்களுக்கு சவாலாக திகழும் பாஞ்ஷிர் பள்ளத்தாக்கை தலைவணங்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
1990களில் தலிபான்கள் ஆதிக்க சக்தியாக இருந்தபோதும்கூட பாஞ்ஷிரை அவர்களால் நெருங்க இயலவில்லை. சோவியத் படைகள் கூட அப்பகுதியை நெருங்க முடியாத அரணாக அகமது ஷா மசூத் வைத்திருந்தார். அம்ருல்லா சாலே அந்தக் கோட்டையில் இருந்து வந்தவர். தலிபான்களை நீண்ட காலமாக எதிர்த்து வருபவர். 1990களில் இளம் வயதில் இருந்தபோதே அவர் தனது பெற்றோரை இழந்தார். அப்போது முதல் அவர் மசூதுடன் இணைந்து தலிபான்கள் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று வருகிறார். 1996ல் தலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றியபோது அவர் அங்கிருந்து தப்பினார். ஆனால், தலிபான்கள் சாலேவின் சகோதரியைக் கைது செய்து துன்புறுத்திக் கொலை செய்தனர்.
எனினும், பாஞ்ஷிர் பள்ளத்தாக்கு அகமது மசூத் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்படும் முன்னாள் துணை அதிபர் அமருல்லா சாலே ஆகியோரின் கட்டுப்பாட்டில் உள்ளதால், நூற்றுக்கணக்கான வீரர்கள் போருக்கு தயார் படுத்தப்பட்டுள்ளனர். இதனால் பாஞ்ஷிர் பள்ளத்தாக்கில் உருவாகும் எதிர்ப்பை சமாளிக்க வேண்டிய நிலைக்கு தலிபான்கள் தள்ளப்பட்டுள்ளனர். தொடர்ந்து தலிபான்கள் அடக்குமுறையை கையிலெடுத்தால், ரத்தம் சிந்த தயார் என அப்துல் மசூத் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிக்க தடை விதித்து, தாலிபான்கள், முதல் கட்டளையை பிறப்பித்தனர். இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பெண்கள் உறைவிட பள்ளியின் நிறுவனர் ஷபானா ரசிக், தாலிபான்களிடமிருந்து அவர்களை பாதுகாக்க மாணவிகளின் பதிவுகளை எரித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பெண்கள் உறைவிடப் பள்ளியின் நிறுவனர் என்ற முறையில், தனது மாணவிகளின் பதிவுகளை அழிப்பதற்காக அல்லாமல், அவர்களையும், அவர்களது குடும்பங்களையும் பாதுகாப்பதற்காக இந்த செயலை செய்ததாக பதிவிட்டுள்ளார்.