அடேய் தலிபான்களா.. நீங்கள் நிம்மதியா ஆட்சி அமைக்க முடியாதுடா.. பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் முழங்கும் எதிர்ப்பு படை.

By Ezhilarasan Babu  |  First Published Aug 23, 2021, 12:03 PM IST

அதில் குறைந்தது 60 தலிபான்கள் காயமடைந்ததாகவும், பலர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இன்னும் பல மாவட்டங்களில் நோக்கி முன்னேற போவதாகவும் தலிபான் எதிர்ப்பு படை அறிவித்துள்ளது.


ஆப்கானிஸ்தானில் பஞ்ஷிர் பள்ளத்தாக்கில்  தலிபான்களின் எதிர்ப்பு படையின் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது. இதனால் பல்வேறு நகரங்களில் இருந்து தலிபான்கள் பஞ்ஷிர் பள்ளத்தாக்கை நோக்கி விரைந்து வருவதாக தலிபான் செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். காபுலுக்கு வடக்கே பஞ்ஷிர் பள்ளத்தாக்கு உள்ளது. நீண்டகாலமாக தலிபான்களுக்கு எதிரான கோட்டையாக அது இருந்துவருகிறது 

Tap to resize

Latest Videos

இந்நிலையில் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதை அடுத்து மெல்ல மெல்ல  ஒவ்வொரு நகரபாக கைப்பற்றி வந்த தலிபான்கள், தலைநகர் காபூல் மற்றும் கந்தகார் நகரங்களையும் கைப்பற்றியதுடன் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்துள்ளனர். இந்நிலையில் மக்களை பாதுகாப்போம் என கூறிவிட்டு மக்களை மிக மோசமாக தலிபான்கள் நடத்தி வருவதாக கூறி, கைர் முகமது அந்தராபியின் தலைமையில் ஆப்கன் பொதுமக்கள் ஒன்று கூடி  தலிபான் எதிர்ப்பு படை அமைத்து, தலிபான்களுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால்  ஆப்கானிஸ்தானின் பாக்லானில் உள்ள பொல் - இ - ஹேசர், தே சலா மற்றும் பானு மாவட்டங்கள் கடந்த வெள்ளிக்கிழமை தாலிபன்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்திகள்  தெரிவிக்கின்றன. 

அந்த தாக்குதலின் போது பல தலிபான்கள் காயமடைந்ததாகவும், பலர் கொல்லப்பட்டதாகவும் ஆப்கனிஸ்தான் செய்தி நிறுவனம் அஸ்வாகா தெரிவித்துள்ளது. அதில் குறைந்தது 60 தலிபான்கள் காயமடைந்ததாகவும், பலர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இன்னும் பல மாவட்டங்களில் நோக்கி முன்னேற போவதாகவும் தலிபான் எதிர்ப்பு படை அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் முன்னாள் துணைத் தலைவர் அம்ருல்லா சலே , நாட்டின் தற்காலிகத் தலைவர் என்று அறிவித்துக் கொண்டு, பஞ்ச்ஷிர் மாகாணத்தில் இருந்து தலிபான்களுக்கு எதிராக ஒரு எதிர்ப்பு முன்னணியை உருவாக்கி உள்ளார். கொல்லப்பட்ட தலிபான் எதிர்ப்பு தலைவர் அகமது ஷா மசூத்தின் மகன் அகமது மசூத், தலிபான் எதிர்ப்புப் படைகளின் தளபதியாகக் கருதப்படுகிறார். 

இந்நிலையில், தலிபான்களுக்கு எதிரான வலுவான தாக்குதல் நடந்த தலிபான் எதிர்ப்பு படை திட்டமிட்டுள்ளதாகவும், ஆப்கனிஸ்தானில் தங்கள் தலைமையில் தனி ஆட்சியை பிரகடனப்படுத்த  அகமது மசூத் தரப்பு உறுதியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பஞ்ஷர் பள்ளதாக்கு உள்ளிட்ட தலிபான்கள் கட்டுப்பாட்டில் வராத சில இடங்களை தலிபான்களிடம் சரணடையும் படி தலிபான்கள் எச்சரித்தும் அதை தலிபான் எதிர்ப்பு படையினர் பொருட்படுத்தவில்லை. இதனால் தலிபான்கள் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், நூற்றுக்கணக்கான தலிபான் போராளிகள் பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்குக்கு அனுப்பப்பட்டதாகக் கூறியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் இன்னும் கைப்பற்றாத சில பகுதிகளில் பஞ்ஷிர் பள்ளத்தாக்கும் ஒன்று எனவும் கூறியுள்ளது.

இதனுடன், பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கில் ஆயுத வாகனங்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. தலிபான் எதிர்ப்பு குழு புதிய ஆட்சி முறையை அறிமுகப்படுத்த விரும்புவதாகவும், தேவைப்பட்டால் போருக்கு தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எனவே தலிபான்களை எதிர்க்க அரசாங்க சார்பு மக்கள் அனைவரும் ஒவ்வொரு மாகாணத்தில் இருந்தும் பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கை நோக்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டுள்ளனர். இருப்பினும், இப்போது நாட்டின் பிற பகுதிகளில் தலிபான்களுக்கு எதிரான குரல்கள் தீவிரமடைந்துள்ளன. அதே நேரத்தில், காபூலில் புதிய அரசாங்கம் அமைவதற்கு முன்பே தங்களுக்கு எதிரான கிளர்ச்சிக் குரல்களால் தலிபான்கள் கலக்கமடைந்துள்ளனர். மீண்டும் தலிபான்களுக்கு எதிராக ஒரு போர் உருவாகும் சூழலும் அங்கு உருவாகி வருவது குறிப்பிடதக்கது. 
 

click me!