கற்பழிக்கப்பட்டதாக புகார் கூறிய இளம் பெண்ணுக்கு மரண தண்டனை... பாகிஸ்தானில் கிராம பஞ்சாயத்தில் தீர்ப்பு!

Asianet News Tamil  
Published : May 29, 2017, 09:31 AM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
கற்பழிக்கப்பட்டதாக புகார் கூறிய இளம் பெண்ணுக்கு மரண தண்டனை... பாகிஸ்தானில் கிராம பஞ்சாயத்தில் தீர்ப்பு!

சுருக்கம்

Pakistani woman alleges she was raped panchayat sentences her to death

பாகிஸ்தானில் கற்பழிக்கப்பட்டதாக புகார் கூறிய 19 வயதான இளம் பெண்ணுக்கு மரண தண்டனை அளித்து கிராம பஞ்சாயத்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் ரஜன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஷுமைலா இவருக்கு வயது 19. இவரது உறவினரான கலீல் அகமது என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது. ஆனால் பின்னர் அவர், கலீல் அகமது தன்னை துப்பாக்கி முனையில் மிரட்டி கற்பழித்ததாக புகார் செய்தார். இந்த விவகாரம் கிராம பஞ்சாயத்துக்கு சென்றது. பஞ்சாயத்து செய்த கிராம நாட்டாமைகள் ஷுமைலா பொய் புகார் அளிப்பதாக கூறி அவரது புகாரை ஏற்கமறுத்து, அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

உடனே ஷுமைலா அந்த அந்தக்கிராமத்திலிருந்து தப்பித்து காவல் நிலையத்திற்கு சென்ற அவர். நான் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது கலீல் அகமது துப்பாக்கி முனையில் என்னை கற்பழித்ததால் சத்தம்போட முடியவில்லை. 

ஆனால் பஞ்சாயத்தார் நான் விரும்பி தான் அவருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி மரண தண்டனை வழங்கி உள்ளனர் என்று போலீசில் புகார் செய்தார்.போலீசார் பஞ்சாயத்தார் மீது வழக்கு பதிவு செய்தனர். ஷுமைலாவை அரசு மகளிர் விடுதியில் தங்க வைத்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

பச்சை பொய்.. இந்தியா குறித்து வங்கதேச போலீஸ் புகாரை தவிடுபொடியாக்கிய BSF!
470 கிலோ எடை.. செர்பியாவில் 80 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய 2ஆம் உலகப்போர் வெடிகுண்டு!