‘புறா மூலம் போதை மாத்திரைகள்’ கடத்தல்... - குவைத் நாட்டு அதிகாரிகள் அதிர்ச்சி!

First Published May 26, 2017, 6:10 PM IST
Highlights
JAIL BIRD Pigeon caught smuggling 178 ecstasy pills in a tiny backpack forcing cops to swoop


ஈராக்கில் இருந்து சில கடத்தல்காரர்கள் போதை மாத்திரைகள், மருந்துகளை புறாக்களின் உடம்பில் கட்டி கடத்துவதை குவைத் நாட்டு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து குவைத் நாட்டில் இருந்து ெவளிவரும் அல் ராய் நாளேடு வௌியிட்டசெய்தியில் கூறியிருப்பதாவது-

19, 20ம் நாற்றாண்டுகளில் புறாக்கள் மூலம் தூதுவிடுவது, செய்திகள் அனுப்புவதை கேள்விப்பட்டு இருக்கிறோம், ஆனால், ஈராக் நாட்டு கடத்தல்காரர்கள் புறாக்களை கடத்தலுக்கு பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

ஈராக்கில் இருந்து தினந்தோறும் ஏராளமான போதை மருந்துகள், மாத்திரைகள் குவைத் நாட்டுக்குள் வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. முஸ்லிம் நாடான குவைத்தில் போதை மருந்து பயன்படுத்த, விற்பனை செய்ய தடை இருக்கிறது. மீறினால், மரணதண்டனை கிடைக்கும். இதனால், அதிகாரிகள் தீவிர ஆய்விலும், சோதனையிலும் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், குவைத்தில் உள்ள அப்தாலி விமான நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு புறாவை அதிகாரிகள் கண்டனர். அதன் உடம்பில் சிறிய அளவிலான பாக்கெட் வைக்கப்பட்டு இருந்தது. அந்த புறாவை லாவகமாக பிடித்த அதிகாரிகள், அந்த புறா உடம்பில் இருந்த  பாக்கெட்டை பிரித்துப் பார்த்த போது, அதில் கேட்டமைன் எனப்படும் போதை மாத்திரைகள் 200க்கும் அதிகமா இருந்தன.

இதையடுத்து, இந்த புறா எங்கிருந்து வந்தது என ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகள், அது ஈராக் நாட்டில் இருந்து அனுப்பப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். ஈராக் நாட்டில் இருந்து போதைமருந்துளை கொண்டு வர முடியாது என்பதால், நன்கு பழக்கப்பட்ட  புறாக்கள் மூலம் போதை மாத்திரைகளை கடத்துகிறார்கள் என்பது அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, அந்த புறாவை கூண்டுக்குள் அடைத்தனர்.

click me!