பேய் மழையால் இலங்கையில் கடும் வெள்ளம்,நிலச்சரிவு - நிவாரணப் பொருட்களுடன் 2 இந்திய கப்பல்கள் விரைவு…

Asianet News Tamil  
Published : May 27, 2017, 09:54 AM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
பேய் மழையால் இலங்கையில் கடும் வெள்ளம்,நிலச்சரிவு - நிவாரணப் பொருட்களுடன் 2 இந்திய கப்பல்கள்  விரைவு…

சுருக்கம்

heavy rainfall in srilanka causes flood and landslide

இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தால் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் மோடி உத்தரவுப்படி நிவாரணப் பொருட்களுட்ன் 2 கப்பல்கள் இலங்கை நோக்கி விரைகின்றன,

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மலைப் பிரதேச மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கீலனி ஆறு மற்றும் காலு கங்காவின் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் பெய்து வரும் மழை மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு 100 க்கும்  அதிகமானோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

இந்த கன மழையால் லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், கனமழை காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

மேலும் மீட்பு பொருட்களுடன் கப்பல் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவி்த்துள்ளார். இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள முதல் கப்பல் இன்று கொழும்பு சென்றடையும் என்றும் , இரண்டாவது கப்பல் நாளை  சென்றடையும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

பச்சை பொய்.. இந்தியா குறித்து வங்கதேச போலீஸ் புகாரை தவிடுபொடியாக்கிய BSF!
470 கிலோ எடை.. செர்பியாவில் 80 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய 2ஆம் உலகப்போர் வெடிகுண்டு!