இந்தியத் தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனம் : எல்லை தாண்டி தாக்குதல் நடத்துகிறோமாம்....

Asianet News Tamil  
Published : Oct 26, 2016, 07:14 AM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
இந்தியத் தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனம் : எல்லை தாண்டி தாக்குதல் நடத்துகிறோமாம்....

சுருக்கம்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லைப்பகுதியில் அத்துமீறி இந்திய ராணுவம் தாக்குதல் நடத்துவதாகக் கூறி, இந்தியத் துணைத் தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் நேற்று கண்டனம் தெரிவித்துள்ளது.

தெற்கு ஆசியா மற்றும் சார்க் அமைப்பின் தலைவர் இந்திய துனைத்தூதர் ஜே.பி.சிங்கை நேற்று அழைத்து தனது கண்டனத்தை பதிவு செய்தார் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது , “ போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இம்மாதம் 23 மற்றும் 24ந்தேதி களில் இந்திய ராணுவத்தினர்,புகுலியான் மற்றும் சப்ரார் எல்லைப்பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1½ வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டனர், 6  பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு, முறையான விசாரணை நடத்தவும், பாகிஸ்தானின் கவலைகளையும் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய ராணுவத்தினர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை மதித்து செயல்பட்டு, எல்லைபுறங்களில் இருக்கும் கிராமங்களில் அமைதியை நிலைநாட்ட உதவ வேண்டும்''  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் எம். நபீஸ் ஜகாரியா கூறுகையில், “ சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 2 பேர் கொல்லப்பட்டனர்.  இது குறித்து ஐக்கிய நாடுகள் ராணுவ பார்வையாலர்கள் அமைப்பில் பாகிஸ்தான் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது'' என்று தெரிவித்தார்.

இந்தியா கருத்து...

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை குறித்து இந்தியா தரப்பில் கூறுகையில், “ இந்திய எல்லைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி சிறியரக பீரங்கிகுண்டுகள், ராக்கெட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்துகிறது. இதில் ராஜோரி மாவட்டத்தில் உள்ள நவுசேரா பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுவன், ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டனர். 10 பேர் காயமடைந்தனர். இந்தியாவின் 25 எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தியா ராணுவம் துல்லியத் தாக்குதல் நடத்தியதற்கு பின்,இதுவரை பாகிஸ்தான் ராணுவம், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி 40 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஈரானை நரகத்திற்கு விரட்டுவேன்: கொக்கரித்த டிரம்ப்... 'பகவந்த் கேசரி' சீனை போட்டு கலாய்த்த ஈரான்!
சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்கா வருகை: விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்ற டொனால்ட் டிரம்ப்!