இந்தியா மீண்டும் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு 10 முறை நடத்துவோம்... பாகிஸ்தான் பகிரங்க எச்சரிக்கை...!

By vinoth kumar  |  First Published Oct 14, 2018, 12:25 PM IST

இந்தியா மீண்டும் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் ராணுவம் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்தியா மீண்டும் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் ராணுவம் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரதமர் மோடி கடந்த மாதம் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசும்பொழுது நமது நாட்டின் அமைதிக்கும், வளர்ச்சிக்கும் குந்தகம் ஏற்படுத்தினால், நமது ராணுவத்தினர் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தானை மறைமுகமாக சாடியிருந்தார். 

இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட செய்தி குறிப்பில் இந்தியா ஒரு முறை துல்லிய தாக்குதல் நடத்தினாலும் பதிலுக்கு 10 துல்லிய தாக்குதல்கள் நடத்தப்படும் என்று கூறியுள்ளார். எங்களுக்கு எதிராக செயல்படலாம் என நினைக்கும் எவருக்கும், எங்களின் வலிமை மீது சந்தேகம் வர வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Latest Videos

முன்னதாக கடந்த ஆண்டு காஷ்மீரின் யூரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் எல்லையில் புகுந்து அதிரடியாக  சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தினர். இதில் 7 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும் 38 தீவிரவாதிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

click me!