மூதாட்டி ஒருவர் அணிலுடன் விமானத்தில் பயணம் செய்ய அடம்பிடித்ததை அடுத்து, அவரை போலீசார் குண்டுகட்டாக வெளியேற்றியுள்ளனர்.
மூதாட்டி ஒருவர் அணிலுடன் விமானத்தில் பயணம் செய்ய அடம்பிடித்ததை அடுத்து, அவரை போலீசார் குண்டுகட்டாக வெளியேற்றியுள்ளனர். அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தின், சர்வதேச விமான நிலையத்தில் ஃபிரன்டியர் ஏர்லைன்ஸ் 1612 என்ற விமானம் நேற்று இரவு பயணிகளுடன் புறப்பட இருந்தது. இந்த விமானம் கிளவ்லேண்டுக்கு புறப்பட தயார் நிலையில் இருந்தது.
அப்போது விமானத்தில் ஏறிய மூதாட்டி ஒருவர், தான் செல்லமாக வளர்த்து வரும் அணில் ஒன்றையும் உடன் வைத்துக் கொண்டு விமானத்தில் ஏறியுள்ளார். இதனைப் பார்த்த விமான ஊழியர்கள், விலங்குகள் பயணிக்க அனுமதியில்லை என்று கூறியுள்ளனர். ஆனாலும், அந்த மூதாட்டி, விமான ஊழியர்கள் கூறியதை கேட்க மறுத்துள்ளார்.
இதனால், மூதாட்டிக்கும் ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மூதாட்டி விமானத்தை விட்டு இறங்கவும் மறுத்து விட்டார். இதன் பிறகு, பொலீசாருக்கு விமானி தகவல் கொடுத்தார். பின்னர் விமானத்துக்குள் ஏறிய போலீசார் மூதாட்டியைக் குண்டுகட்டாக வெளியேற்றினர். மூதாட்டியை, போலீசார் வெளியேற்றும் காட்சிகள் தற்போது, இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
மூதாட்டியின் இந்த அலம்பல் காரணமாக இந்த விமானம் இரண்டு மணி நேர தாமதத்துக்குப் பிறகு க்ளைவ்லேண்டுக்குப் புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவத்தால் புளோரிடா விமான நிலையம் சிறிது நேரம்பரபரப்புடன் காணப்பட்டது.