பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து... 50 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

Published : Oct 11, 2018, 12:57 PM IST
பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து... 50 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

சுருக்கம்

கென்யாவில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 50 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கென்யாவில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 50 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கென்யா தலைநகர் நைரோபியில் இருந்து மேற்கு பகுதியில் உள்ள காகமேகா நோக்கி பேருந்து ஒன்று 52 பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்தது. 

அந்த பேருந்து கெரிச்சோ கவுண்டி பகுதியில் சாலையில் சென்றிக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்து 4 முறை பள்ளத்தில் உருண்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  

விபத்து நடந்த இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்தனர். விபத்தில் உயிரிழந்தோர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கென்யாவில் ஆண்டுக்கு 3,000 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

இந்தியா-பங்களாதேஷ் எல்லை.. ஈசியாக பார்டரை தாண்டும் இளைஞர்கள்.. வைரல் வீடியோ!
ஆங் சான் சூச்சி உயிருடன் இருக்கிறாரா?.. எந்த தகவலும் தெரியவில்லை.. மகன் கிம் அரிஸ் கவலை!