காஷ்மீர் இந்தியாவின் பகுதியென தில்லாக செய்தி வெளியிட்ட பாகிஸ்தான் தொலைக்காட்சி...!! இம்ரான் அதிர்ச்சி..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 9, 2020, 6:16 PM IST
Highlights

ஏற்கனவே இந்த தொலைக்காட்சி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போது அதை நேரடியாக ஒளிபரப்பு செய்தது. சீனாவிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் பள்ளிக்கூடத்தில் இம்ரான்கான் உரையாற்றினார்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடுமையான மோதல் இருந்து வரும் நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த செய்தி தொலைக்காட்சி ஒன்று காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என செய்தி வெளியிட்டுள்ளது. இது பாகிஸ்தானில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்த தொலைக்காட்சி இந்த தவறுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது. கடந்த ஆண்டு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது செல்லாது என வலியுறுத்தி பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன், சீனாவின் துணையுடன் காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா மன்றம் வரை கொண்டு சென்று சர்வதேச பிரச்சினையாக்க முயன்று பின்னர் அதில் தோல்வியை சந்தித்துள்ளது. 

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தானிடையே பகை நீறுபூத்த நெருப்பாக இருந்துவரும் நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த பி.டி.வி என்ற தொலைக்காட்சி, காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியென கூறியுள்ளது. அதாவது காஷ்மீரை சித்தரிக்கும் வகையில் செய்தி ஒன்று வெளியிட்ட அந்த தொலைக்காட்சி, காஷ்மீரை இந்தியாவின் பகுதியாக காட்டியது, இதைக்கண்ட பாகிஸ்தானியர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிவருகின்றனர். இந்நிலையில் அந்த குறிப்பிட்ட செய்திக்கு மன்னிப்பு கோரியுள்ள தொலைக்காட்சி நிறுவனம், இது மனித பிழை காரணமாக நடந்த தவறு என்றும், இந்த தவறுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த தவறு மன்னிக்க முடியாதது என்று தங்கள் நிறுவனம் கருதுவதாகவும், அந்த தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே இந்த தொலைக்காட்சி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போது அதை நேரடியாக ஒளிபரப்பு செய்தது. சீனாவிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் பள்ளிக்கூடத்தில் இம்ரான்கான் உரையாற்றினார், நேரடி ஒளிபரப்பின் போது திரையில் பெய்ஜிங் என்பதற்கு பதிலாக "பிச்சை" என ஆங்கிலத்தில் எழுதி இருந்தது, சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக அந்த வார்த்தை ஒளிபரப்பான நிலையில், பிறகு அந்த வார்த்தையை அது நீக்கியது, இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், பெய்ஜிங்கில் உள்ள மத்திய கட்சி பள்ளியில் நடந்த அந்த நிகழ்ச்சியில் நிதி நெருக்கடிக்கு உள்ளான  பாகிஸ்தானுக்கு "பொருளாதார பொதி " அதாவது பாகிஸ்தானுக்கு நிதி திரட்டும் வகையில் அது நடைபெற்றது. இந்த நிலையில் அந்த தொலைக்காட்சி பிச்சை என வார்த்தையை ஒளிபரப்பியது பாகிஸ்தானியர்களை அதிர்ச்சி அடைய வைத்தது, அப்போது அந்த நிறுவனம் பகிரங்க மன்னிப்பு கேட்ட நிலையில், மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

 

click me!