வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் எடுத்த பயங்கர முடிவு..!! நடுங்கும் தென் கொரியா..!!

By Ezhilarasan Babu  |  First Published Jun 9, 2020, 5:21 PM IST

இருநாட்டிற்கும் இடையேயான தகவல் தொடர்பு அலுவலகமும் மூடப்படும்  எனவும் தனது அறிக்கையின் வாயிலாக கிம்-யோ-ஜாங் கூறியிருந்தார். 


தென்கொரியா உடனான அனைத்து வகையான தொடர்புகளையும் துண்டித்துக் கொள்வதாக வடகொரியா அதிரடியாக அறிவித்துள்ளது. இதற்கான தகவலை வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது. தென்கொரியாவின் நடவடிக்கைகளில் திருப்தி இல்லாததால் வட கொரிய மக்கள் தென் கொரியாவின் உறவை விரும்பவில்லை என கூறியுள்ள அந்த நாளேடு, தென்கொரிய தலைநகர் சியோலில் உடனான அனைத்து தொடர்புகளையும் முடிவுக்குக் கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. வடகொரிய அதிபர் கிம்-ஜாங்-உன்னின் சர்வாதிகாரத்திற்கு எதிராக தென்கொரிய நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் எல்லையைத் தாண்டி துண்டுப்பிரசுரங்களை வீசிய சம்பவத்தால்  வடகொரியா மிகுந்த கோபமடைந்தது.  வடகொரியாவுக்கு எதிராக இந்நடவடிக்கையில் ஈடுபட்ட அச்செயற்பாட்டாளர்களை ஒடுக்காவிட்டால், இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒப்பந்தம் ரத்துசெய்யப்படும் என்றும், வடகொரியா வியாழக்கிழமை தென் கொரியாவை எச்சரித்தது. அதே நேரத்தில், இருநாட்டு எல்லையில் கட்டப்பட்டுள்ள லைசான் அலுவலகமும் (தகவல் தொடர்பு அலுவலகம்) மூடப்படும் என வட கொரியா காட்டமாக எச்சரித்திருந்தது.

 

Tap to resize

Latest Videos

இது குறித்து வட கொரிய அதிபர் கிம்-ஜாங்-உன்னின் சக்திவாய்ந்த தங்கை கிம்-யோ-ஜாங் வெளியிட்ட அறிக்கையில் 2018 ஆம் ஆண்டில், கிம்-ஜாங்-உன் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் இடையேயான இராணுவ ஒப்பந்தத்தில் இரு நாட்டுக்கும் இடையே பரஸ்பர அமைதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், தென்கொரியாவின் சமூக சேவையாளர்களும், வடகொரியாவின் பிரிவினைவாதிகளும் நீண்ட காலமாக வடகொரியாவுக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறார்கள் என்பதை நன்கு அறிவோம், இந்த ஆர்வலர்கள் வடகொரிய இறையாண்மை மற்றும் அணுசக்தி பற்றிய விவகாரங்களில் பைத்தியக்காரத்தனமாக செய்திகளை பிரச்சாரம் செய்து வருகின்றனர், எனவே "தென்கொரியா மீண்டும் மீண்டும் சாக்குப்போக்கு கூறி, வடகொரியாவுக்கு எதிரான நிலைமையைக் கட்டுப்படுத்தாவிட்டால்,  அதற்கு அதிகவிலை கொடுக்க வேண்டியிருக்கும்",  இந்த அத்துமீறலை பொறுப்புணர்வுடன் சரிசெய்ய வேண்டிய நேரம் இது, எனவே பிரச்சனையை சரிசெய்யாவிட்டால், 2018 ஆம் ஆண்டில் மூன் ஜே-இன் பியோங்சாங்கிற்கு வந்தபோது இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை பதற்றங்களைத் தணிக்க கையெழுத்திட்ட இராணுவ ஒப்பந்தத்தை நிராகரிக்க நேரிடும். இருநாட்டிற்கும் இடையேயான தகவல் தொடர்பு அலுவலகமும் மூடப்படும்  எனவும் தனது அறிக்கையின் வாயிலாக கிம்-யோ-ஜாங் கூறியிருந்தார். 

இந்நிலையில் கே.சி.என்.ஏ வெளியிட்டுள்ள செய்தியில்,  தென்கொரிய அதிகாரிகளின் நடத்தையால் வடகொரிய மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர், பொறுப்பற்ற நபர்களை பொறுப்பற்ற முறையில் வடகொரியாவிற்குள் நுழைய தென்கொரிய அதிகாரிகள் அனுமதித்திருப்பது வடகொரியாவின் கவுரவத்தை பாதிக்கிறது. எனவே தென்கொரியாவுடன் பேச வேண்டாம் என வடகொரியா முடிவு செய்துள்ளது. இதனால் வடகொரியா-தென்கொரியா உடனான அனைத்து தொடர்புகளையும் இன்று பிற்பகலுக்குள் நிறுத்திவிடும் என தெரிவித்துள்ளது.  வடகொரியாவின் ஆட்சியாளர் கிம் ஜாங் உன்னில் சகோதரியும் மத்திய குழுவின் துணைத் தலைவருமான கிம் ஜான் சோல் தென்கொரியாவுடன் எதிரியாக செயல்பட முடிவு செய்துள்ளார் என கே.சி.என்.ஏ செய்தி வெளியிட்டுள்ளது. 

 

click me!