தீவிரவாதிகளுடன் கைகுலுக்க கத்தார் சென்ற இம்ரான்கான்: தாலிபன்களுடன் பஞ்சாயத்து பேச பாகிஸ்தானை அழைத்த அமெரிக்கா

By Ezhilarasan BabuFirst Published Feb 28, 2020, 12:08 PM IST
Highlights

அமெரிக்கா மற்றும் தாலிபன்கள் இடையே  அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ள நிலையில் ,  அதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கலந்துகொள்ள உள்ளார் ஆப்கானிஸ்தான் அரசு படைகளுக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த 18 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது . 

அமெரிக்கா மற்றும் தாலிபன்கள் இடையே  அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ள நிலையில் ,  அதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கலந்துகொள்ள உள்ளார் ஆப்கானிஸ்தான் அரசு படைகளுக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த 18 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது . ஆயிரக்கணக்கில் பொதுமக்கள்  கொல்லப்பட்டுள்ளனர் .  ஆப்கனிஸ்தான் அரசு படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா ராணுவத்தினர் சுமார் 14 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . அதே நேரத்தில்  ஆப்கானிஸ்தானிலிருந்து   தனது படையை வாபஸ் வாங்கிக் கொள்ள அமெரிக்காவும் முடிவு செய்துள்ளது.  

இந்நிலையில் தாலிபன்களுக்கும் ,  அமெரிக்கப் படைகளுக்கும் இடையே நடந்த அந்த அமைதிப் பேச்சுவார்த்தையில்  சாதகமான முடிவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில்  சமீபத்தில் இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் தாலிபன்கள் அமைதி  பேச்சுவார்த்தைக்கு  ஒத்துழைப்பார்கள் என நம்புகிறோம் என தெரிவித்திருந்தார் .  இந்நிலையில் அமெரிக்கா ,  தாலிபன்களிடையே  கத்தார் நாட்டில் தோஹாவில் நாளை அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.  இதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பங்கேற்க உள்ளார்.  ஆப்கனிஸ்தான் மற்றும் அமெரிக்காவின் சார்பில் இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .  அந்த அழைப்பை ஏற்றுள்ள  அவர் கத்தாருக்கு விரைந்துள்ளார். 

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்  அமெரிக்காவுக்கும்  தாலிபன்களுக்கும் இடையே  அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ள நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கலந்துகொள்ள உள்ளார் .  இந்த பயணத்தின் போது அரசர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானியை  சந்தித்து அவர் பேச உள்ளார் .  அப்போது இருதரப்பு ஒத்துழைப்பு வலுபடுத்துவது மற்றும் பிராந்திய அளவிலான மேம்பாடு குறித்தும் இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது .  இந்த ஒப்பந்தம் கையெழுத்தான உடன் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள்  வாபஸ் பெறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது .
 

click me!