கொரோனாவுக்கு எதிராக ஜிகாத்..!! பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பகிரங்க அறிவிப்பு...!!

By Ezhilarasan BabuFirst Published Apr 1, 2020, 6:31 PM IST
Highlights

இந்தத் தொற்று நோயால் ஏற்படும் துன்பங்களுக்கு எதிராக ஜிகாத் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும், கொரோனா எதிர்ப்பு புலிப்படை என்ற படையில் சேர்வதன் மூலம் கோவிட்-19 க்கு எதிரான போராட்டத்தில் பங்க பொற முடியும்,  

பாகிஸ்தானில் கொரோனா வைரஸை எதிர்கொள்ளவும் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவவும் மனமுவர்ந்து நன்கொடை வழங்க வேண்டும் என நாட்டின் பிரதமர் இம்ரான்கான் அந்நாட்டுமக்களுக்கு வலியுறுத்தி உள்ளார் .  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது தற்போது இந்தியாவைப் போலவே பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் தாக்குதலை தொடங்கியுள்ளது .   இந்நிலையில் பாகிஸ்தானில்  1660 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர்,  14 பேர் உயிரிழந்துள்ளனர் .  இந்நிலையில் பாகிஸ்தான் வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  பெரும்பாலான மக்கள் ஏழை எளிய  கூலி நடுத்தர மக்களா உள்ளனர், எனவே அங்கு ஊரடங்கு உத்தரவு பெருமளவில்  மக்களை வறுமையில் விழச்செய்யும் அச்சம் நிலவியது . ஆனாலும் வைரஸை கட்டுப்படுத்த வேறுவழிதெரியாமல்  கடந்த சில தினங்களுக்கு முன்பு  பிரதமர் இம்ரான்கான் ஊரடங்கை அறிவித்தார். 

இதனால் பெரும்பாலான மக்கள் வறுமைக்கு ஆளாகி உள்ளனர் . இந்நிலையில் இது  குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள இம்ரான்கான் , கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு உதவவும் பாகிஸ்தானுக்கு அதிக அளவில் நிதி தேவைப்படுகிறது ,  எனவே பாகிஸ்தானில் உள்ள தொழிலதிபர்கள் பெருமுதலாளிகள் செல்வந்தர்கள் மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்யும்  பாகிஸ்தானியர்கள் முன்வந்து  நாட்டிற்காக  நிதி வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார் .  குடிமக்கள் தங்கள் நன்கொடையை பாக்கிஸ்தான் தேசிய வங்கி, பிரதான கிளை கராச்சி, - 4162786786, என்ற கணக்கு எண்ணுக்கு அனுப்பலாம் ,  மேலும் விவரங்களுக்கு, குடிமக்கள் நிவாரண நிதிக்காக அமைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார் அதுமட்டுமல்லாமல்  கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்க அரசாங்கத்தின் தன்னார்வ படையைச் சேர்ந்த இளைஞர்கள் முன்வருமாறு  அவர் அழைப்பு விடுத்துள்ளார் . 

 இந்தத் தொற்று நோயால் ஏற்படும் துன்பங்களுக்கு எதிராக ஜிகாத் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும், கொரோனா எதிர்ப்பு புலிப்படை என்ற படையில் சேர்வதன் மூலம் கோவிட்-19 க்கு எதிரான போராட்டத்தில் பங்க பொற முடியும்,  ஆகவே  இளைஞர்கள் முன்வந்து தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன் என இம்ரான் தெரிவித்துள்ளார். அதே போல் தன்னார்வ தொண்டு செய்ய விரும்புவோர் பிரதமரின் சிட்டிசன் போர்ட்டில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார் .  பாகிஸ்தானில் கிட்டத்தட்ட 15 மில்லியன் மக்களுக்கு உணவு மற்றும் பணம் செலவு செய்யவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்ற அவர் நன்கொடை அளிக்க முன்வர வேண்டும் என மறுபடி மறுபடியும் கேட்டுக்கொண்டுள்ளார்.   அதேபோல் நன்கொடை தருபவர்களுக்கு வரி தளர்வு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார் .  மேலும் தெரிவித்த இம்ரான் ,  சீனா அமெரிக்கா போன்ற நாடுகளைப் போன்ற பாகிஸ்தானில் ஏராளமான வளங்கள் இல்லை ,  எனவே இந்த வைரசுக்கு எதிராக பாகிஸ்தான் புத்திசாலித்தனமான போரை நடத்த வேண்டியுள்ளது என்றார்.  பாகிஸ்தானுக்கு அமெரிக்கா 2000 மில்லியன் டாலர் ஒதுக்கியுள்ள நிலையில் பாகிஸ்தான் வெறும் 8 மில்லியன் டாலர் மட்டுமே ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது . 
 

click me!