உலகளவில் 9 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு.. அமெரிக்காவில் உக்கிரம்.. நாடு வாரியாக முழு விவரம்

By karthikeyan VFirst Published Apr 1, 2020, 6:02 PM IST
Highlights

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகளவில் 9 லட்சத்தை நெருங்கிவிட்டது. உலகளவில் 43 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
 

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் உருவாகி, உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். உலகம் முழுதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி சமூக பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தையும் முடக்கி, சர்வதேச அளவில் மோசமாக விளைவுகளையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது கொரோனா.

கொரோனாவிற்கு மருந்து இல்லாததால், அதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் ஊரடங்கை அமல்படுத்திவிட்டு, பாதிக்கப்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளித்துவருகின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்கிவிட்டது. உலகளவில் மொத்தம் 8 லட்சத்து 76 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 ஆயிரத்து 518 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பில், அந்த வைரஸ் உருவான சீனாவை விட இத்தாலி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் கோர தாண்டவம் ஆடிய கொரோனா, தற்போது அமெரிக்காவை அலறவிட்டுவருகிறது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கிவிட்டது. 

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை நாடுகள் வாரியாக பார்க்கலாம்.

நாடு வாரியாக முழு விவரம்:

அமெரிக்கா - 188,647 (உயிரிழப்பு-4,059)

இத்தாலி - 105,792 (உயிரிழப்பு - 12,428)

ஸ்பெய்ன் - 102,136 (உயிரிழப்பு - 9,053)

சீனா - 81,554 (உயிரிழப்பு - 3,312)

ஜெர்மனி - 72,914(உயிரிழப்பு - 793)

ஈரான் - 47,593 (உயிரிழப்பு - 3,036)

ஃப்ரான்ஸ் - 52,128 (உயிரிழப்பு - 3,523)

பிரிட்டன் - 25,150 (உயிரிழப்பு - 1,789)

சுவிட்சர்லாந்து - 16,605 (உயிரிழப்பு - 433)

பெல்ஜியம் - 13,964 (உயிரிழப்பு - 828)

நெதர்லாந்து - 13,614 (உயிரிழப்பு - 1,173)

தென்கொரியா - 9,887 (உயிரிழப்பு - 165)

துருக்கி - 13,531(உயிரிழப்பு - 214)

ஆஸ்ட்ரியா - 10,444 (உயிரிழப்பு - 146)

போர்ச்சுகல் - 8,251 (உயிரிழப்பு - 187)

கனடா - 8,612(உயிரிழப்பு - 101)

இஸ்ரேல் - 5,591(உயிரிழப்பு - 21)

பிரேசில் - 5,812(உயிரிழப்பு - 203)

ஆஸ்திரேலியா - 4,864     (உயிரிழப்பு - 21)    

சுவீடன் - 4,947(உயிரிழப்பு - 239)  

மலேசியா - 2,908(உயிரிழப்பு - 45)

இந்தியா - 1,711 (உயிரிழப்பு - 45)
 

click me!