மோடியிடம் உதவி கேட்கும் பாகிஸ்தான் மக்கள்..!! இம்ரான்கான் செயலால் நேர்ந்த துயரம்..!!

By Ezhilarasan Babu  |  First Published Apr 1, 2020, 5:17 PM IST

ராஜஸ்தான் வழியாக சிந்துக்கு உணவு பொருட்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.  மனிதாபிமான அடிப்படையில் தங்களுக்கு உதவ வேண்டுமென பிரதமர் மோடியிடம் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 


இந்தியாவைப் போலவே கொரோனா வைரசால் பாகிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுவரும் நிலையில் அங்கு வசிக்கும் இந்துக்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மறுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது .  உலகம் முழுவதும் கொரோனா  வைரஸ் வேகமாக பரவியுள்ளது தற்போது இந்தியா பாகிஸ்தான்  உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் அது மெல்ல மெல்ல வேகம் எடுக்க தொடங்கியுள்ளது.  இந்நிலையில் பாகிஸ்தானில்  1,660 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .  இதுவரையில் அங்கு 14 பேர் உயிரிழந்துள்ளனர் .  இந்நிலையில் பாகிஸ்தானில் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது .  எனவே இந்தியாவைப் போலவே அங்கும் மக்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். 

Latest Videos

இந்நிலையில் கராச்சியில் உள்ள மக்களுக்கு உள்ளூர் நிர்வாகத்தால் ரேஷன் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு வசிக்கும் இந்து சமூக மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க சென்றனர், ஆனால் அங்கிருந்து அதிகாரிகள் இது இஸ்லாமிய மக்களுக்கு மட்டும் தான் இந்துக்களுக்கு அல்ல என கூறி இந்துக்களை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது .  அதேபோல் சிந்துவில் இந்து மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர் அங்கு கிட்டதட்ட 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர் அந்த இடத்திலும் இந்துக்களுக்கு ரேஷன் பொருட்கள்  மறுக்கப்பட்டுள்ளது .  அதேபோல் கராச்சியில் உள்ள லியாரி, சச்சால் கோத் பகுதிகளில்  ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் உணவுப் பொருட்கள் இன்றி திண்டாடி வருகின்றனர் . 

அந்த இடங்களிலும் இஸ்லாம் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.  சிந்து பகுதி முழுவதும்  சிறுபான்மையின மக்களான இந்துக்களுக்கு ரேஷன் பொருட்கள் மறுக்கப்பட்டுள்ளது , அதாவது இம்ரான்கான் அரசு பாகிஸ்தான் மக்களை மத அடிப்படையில் பாகுபாடுத்த முயன்று வருவதாகவும் அங்கு வசிக்கும் இந்துக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்நிலையில் உணவுப் பொருள் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் இந்து  சிறுபான்மையின மக்கள்,  இந்திய பிரதமர் மோடியிடம் ராஜஸ்தான் வழியாக சிந்துக்கு உணவு பொருட்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.  மனிதாபிமான அடிப்படையில் தங்களுக்கு உதவ வேண்டுமென பிரதமர் மோடியிடம் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 
 

click me!