பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அந்நாட்டு தொலைகாட்சி சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆயத்தமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அந்நாட்டு தொலைகாட்சி சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆயத்தமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நேர்மையான மற்றும் முக்கியமான பேச்சுக்கு அழைப்பு விடுத்திருக்கும் அவர், ஏற்கெனவே இந்தியாவுடன் நடந்த மூன்று போர்களிலிருந்து பாகிஸ்தான் பாடம் கற்றுக்கொண்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியப் பிரதமருக்கான செய்தி இதுதான் என்று குறிப்பிட்டுப் பேசிய ஷெரீப், “இருவரும் அமர்ந்த நேர்மையுடன் தீவிரப் பேச்சுவார்த்தை நடத்தினால் காஷ்மீர் விவகாரம் போன்ற இருநாடுகளுக்கும் இருக்கும் முக்கியப் பிரச்சினைகளைத் தீர்த்துவிடலாம். ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டு நேரத்தையும் வளங்களையும் நாசம் செய்வதை விடுத்து, அமைதியுடன் முன்னேற்றப் பாதையில் பயணிக்கலாம்” எனத் தெரிவித்தார்.
இலங்கையில் 13வது திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும்: அதிபர் ரணில் விக்கிரமசிங்கே
ஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக இந்தியா மீது குற்றம்சாட்டிய ஷெரீப், “இதை உடனே நிறுத்தவேண்டும். அதுதான் இந்தியா பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறது என்பதை உலக அரங்கில் அறிவிப்பதாக இருக்கும்” என்றும் கூறினார்.
“இந்தியாவுடன் மூன்று போர்களில் ஈடுபட்டிருக்கிறோம். அதனால், மேலும் மேலும் துயரங்கள்தான் வந்திருக்கின்றன. வறுமையும் வேலைவாய்ப்பின்மையும்தான் அதிகரித்துள்ளன. நாங்கள் தக்க பாடத்தைக் கற்றுக்கொண்டுவிட்டோம். இப்போது முக்கியப் பிரச்சினைகளைத் தீர்த்து அமைதியாக வாழ்வதை விரும்புகிறோம்” என்றும் ஷெரீப் கூறினார்.
“வறுமையை ஒழித்து, வளத்தைப் பெருக்க வேண்டும். கல்வி, சுகாதார வசதிகள், வேலைவாய்ப்புகளை மக்களுக்கு வழங்க வேண்டும். வெடிகுண்டுகளுக்காகவும் ஆயுதங்களுக்காகவும் நம் வளங்களை வீணாக்கக் கூடாது என்பதுதான் பிரதமர் மோடிக்கு நான் சொல்ல விரும்பும் செய்தி” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
World Economic Forum:உலகப் பொருளாதார வளர்ச்சி குறையும்: 73 சதவீத சிஇஓ-க்கள் எதிர்பார்ப்பு