அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச்சூடு படுகொலைகள்! புளோரிடாவில் 8 பேர் பலி

By SG Balan  |  First Published Jan 17, 2023, 10:49 AM IST

அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங் பிறந்தநாள் விழாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.


அமெரிக்காவில் பொது இடங்களிலும் நிகழ்ச்சிகளிலும் திடீர் துப்பாக்கிச்சூடு நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது. புளோரிடாவில் திங்கட்கிழமை நடைபெற்ற  மார்ட்டின் லூதர் கிங் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில் குறைந்தது எட்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

புளோரிடா மாகாணத்தில் பியர்ஸ் கோட்டையிலர் உள்ள எலிஸ் பூங்காவில் மார்ட்டின் லூதர் கிங் பிறந்தநாளை முன்னிட்டு இசை நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், கார் கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Tap to resize

Latest Videos

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அண்மைக்காலமாக மிகவும் அதிகரித்து வருகின்றன. 2020ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 600 பேருக்கு மேல் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளனர்.

துப்பாக்கிச்சூடுகளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2018ஆம் ஆண்டில் 336 ஆக இருந்தது. இது 2019ஆம் ஆண்டில் 417, 2020ஆம் ஆண்டு 610, 2021ஆம் ஆண்டு 690, 2022ஆம் ஆண்டு 617 என அதிகரித்து வந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் பலி எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்காகக் கூடியிருக்கிறது.

click me!