சீனாவில் 60 ஆண்டுகளில் சுருங்கிய மக்கள் தொகை; உழைக்கும் வயதினரும் குறைந்து தடுமாறும் பீஜிங்; காரணம் என்ன?

By Dhanalakshmi G  |  First Published Jan 17, 2023, 11:54 AM IST

கடந்த 60 ஆண்டுகளில் முதன் முறையாக கடந்தாண்டு சீனாவின் மக்கள் தொகை குறைந்துள்ளது. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் மக்கள் தொகை குறைந்து வருவதற்கு அந்த நாட்டின் கொள்கைகளும் காரணமாக அமைந்து இருக்கிறது.


சீனாவில் 140 கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். மக்கள் தொகை அதிகளவில் இருந்தாலும், சீனாவில் உழைக்கும் வயதினரின் சதவீதம் வெகுவாக குறைந்து இருக்கிறது. இதற்கு காரணம் பிறப்பு விகிதங்களில் ஏற்பட்டு இருக்கும் ஏற்றத் தாழ்வுகள் தான் காரணமாக கூறப்படுகிறது. இது சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பின்னடைவை கொடுக்கலாம் மற்றும் நாட்டின் கருவூலத்தை அதாவது நிதி நிலையை பெரிய அளவில் பாதிக்கலாம் என்று பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

பீஜிங் தேசிய புள்ளியியல் கணக்கின்படி 2022 ஆம் ஆண்டின் இறுதியில் மக்கள் தொகை சுமார் 141.17 கோடியாக இருந்துள்ளது.   இது இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8,50,000 குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறப்பு எண்ணிக்கை 90.56 லட்சமாக இருக்கும்போது, இறப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 41 லட்சமாக இருக்கிறது என்று பீஜிங் தேசிய புள்ளியியல் தெரிவிக்கிறது. 

Latest Videos

undefined

சீனாவின் மக்கள்தொகை இதற்கு முன்பு கடைசியாக 1960 ஆம் ஆண்டில் குறைந்து இருந்தது. சீனாவின் மாடர்ன் வரலாற்றில் அப்போது மிகப்பெரிய பஞ்சத்தை எதிர்கொண்டது. மாவோ சேதுங்கின் மோசமான விவசாயக் கொள்கையால் பேரழிவு ஏற்பட்டது என்று கூறப்பட்டது. 

இந்த நிலையில், கடந்த 1980 ஆம் ஆண்டில், கட்டுக்கடங்காமல் மக்கள் தொகை பெருகிவிடும் என்ற அச்சத்தில் "ஒரு குழந்தை கொள்கையை" சீனா கடுமையாக கையாண்டது. இதனாலும், மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் இந்தக் கொள்கை தளர்த்தப்பட்டு, 2021ஆம் ஆண்டில், தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற அனுமதி அளித்தது. 

China GDP Growth: 50 ஆண்டுகளில் இல்லாத அளவு சீனப் பொருளாதார வளர்ச்சி 2022ம் ஆண்டில் சரிந்தது

பொருளாதார மந்தநிலைக்குப் பின்னர், அன்றாட செலவு அதிகரித்தல், பணியிடத்தில் அதிகரித்து வரும் பெண்களின் எண்ணிக்கை மற்றும் உயர்கல்வியை நாடுதல் என சீனா பல்வேறு உள்நாட்டு சிக்கல்களை சந்திக்க நேரிட்டது. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. 

இதையடுத்து கருத்து தெரிவித்து இருந்த ஆஸ்திரேலியா விக்டோரியா பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர் சிஜியான் பெங், ''பிறப்பை ஊக்குவிக்க சீன அரசாங்கம் பயனுள்ள கொள்கைகளை கண்டறிய வேண்டும், இல்லையெனில், கருவுறுதல் இன்னும் குறையும்," என்று தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில்தான், சீனாவின் பல்வேறு உள்ளூர் நகர அதிகாரிகள் குழந்தை பிறப்பை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். உதாரணமாக, தெற்கில் இருக்கும் மிகவும் பிரபல ஷென்சென் நகரில் தற்போது குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் குழந்தை பிறந்து, மூன்று வயது ஆகும் வரை சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு படிகள் வழங்கப்பட்டு வருகிறது. 

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச்சூடு படுகொலைகள்! புளோரிடாவில் 8 பேர் பலி

இந்த திட்டத்தின்படி, முதல் குழந்தை பிறந்தால், தம்பதியினருக்கு தானாகவே 36,274 ரூபாய் கிடைக்கும். இது அந்த தம்பதிகளுக்கு மூன்றாவது குழந்தை பிறக்கும்போது 1,20,914 ரூபாயாக அதிகரிக்கும். 

நாட்டின் கிழக்கில், இருக்கும் ஜினான் நகரம் ஜனவரி 1 முதல் இரண்டாவது குழந்தையைப் பெற்ற தம்பதிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக 7,255 ரூபாய் வழங்கப்படுகிறது.  

"2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கு இடையில், ஒவ்வொரு ஆண்டும், குழந்தை பெறத் தகுதி பெறும் பெண்களின் எண்ணிக்கை 50 லட்சமாக குறைந்து வந்துள்ளது. இதுவும் இயற்கையாகவே மக்கள் தொகை குறையக் காரணமாக அமைந்துள்ளது. மக்கள்தொகையில் முதியோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இதுவும் சீனாவின் பொருளாதாரத்திற்கு பெரிய இழப்பாக இருக்கிறது என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

click me!