காசநோய், போலியோ மற்றும் டெட்டனஸ் போன்றவற்றைத் தடுக்க அல்லது சிகிச்சையளிப்பது உட்பட பல தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதைக் காட்டுகிறது.
பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டை நீக்க இந்தியாவிலிருந்து அதிக அளவில் மருந்துகளை பாகிஸ்தான் இறக்குமதி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது, கோவிட் -19 மற்றும் பிற வியாதிகள் தொடர்ந்து அங்கு அதிகரித்து வருவதால் முக்கிய உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் வைட்டமின் மாத்திரைகள், இன்னும் பல முக்கிய மருந்துகளை உற்பத்தி செய்யும் மூலப் பொருட்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கான தடையை பாகிஸ்தான் நீக்கியுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது ,இந்தியாவைப் போலவே பாகிஸ்தானிலும் கொரோனா தீவிரமடைந்து வருவதால் அங்கு மருந்து மாத்திரைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது . எனவே இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் அதிக அளவில் மருந்துகளை இறக்குமதி செய்து வருவதாக பாகிஸ்தான் தேசிய சுகாதார சேவை அமைச்சகத்தின் ஆவணங்களை மேற்கோள் காட்டி பாகிஸ்தானின் முன்னணி ஆங்கில நாளேடான தி டான் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் இருந்து ஏராளமான வைட்டமின் மாத்திரைகள் மற்றும் மருந்துகள் மற்றும் மருத்துவ சால்டுகளை அதிக அளவில் பாகிஸ்தான் இறக்குமதி செய்துள்ளதாக டான் கூறியுள்ளது . காஷ்மீரின் 370 ஆவது சட்டப்பிரிவை இந்தியா ரத்து செய்ததை அடுத்து இம்ரான்கான் அரசு கடந்த 2019 ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்று இந்தியாவுடனான அனைத்து வகையான வர்த்தகத்தையும் பாகிஸ்தான் நிறுத்திக் கொள்வதாக அறிவித்தார். ஆனால் இந்தியாவில் இருந்து ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட மருந்து பொருட்களுக்கு தளர்வு அளிக்க வேண்டும் என இந்திய மருந்து நிறுவனங்கள் கேட்டுக்கொண்டதையடுத்து அதில் பாகிஸ்தான் அரசு சில தளர்வுகளை வழங்கியது. இந்நிலையில் அந்நாட்டில் கொரோனா தாக்கம் எதிரொலியாக முற்றிலுமாக அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளது , அதுமட்டுமின்றி அந்நாட்டில் மருந்து கையிருப்பு வெகுவாக குறைந்துவருவதால் பாகிஸ்தானின் மருந்து தொழில் நிறுவனங்கள் இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவ மூலப்பொருட்களுக்கான தடையை பாகிஸ்தான் அரசு உடனே நீக்க வேண்டும் ஏனெனில் நாடு கடுமையான மருந்துகள் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது ,
குறிப்பாக உயிர் காக்கும் மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என அரசுக்கு கோரிக்கை வைத்தது . அதனையடுத்து இந்தியாவிலிருந்து மருந்துகள் மற்றும் மருத்துவ மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடையை பாகிஸ்தான் அரசு நீக்கியுள்ளது, இந்நிலையில் கடந்த -5அம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட உள்ள மருந்து விவரங்கள் குறித்து பாகிஸ்தான் சுகாதாரத்துறை சமர்ப்பித்த அறிக்கையை இம்ரான் கான் பார்வையிட்டார் . எம்.எச்.எஸ் செயலாளர் டாக்டர் தன்வீர் அகமது குரேஷி கையெழுத்திட்ட இந்த ஆவணம், காசநோய், போலியோ மற்றும் டெட்டனஸ் போன்றவற்றைத் தடுக்க அல்லது சிகிச்சையளிப்பது உட்பட பல தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதைக் காட்டுகிறது. எனவும் மேலும், பி 1, பி 2, பி 6, பி 12, டி 3 மற்றும் துத்தநாக சல்பேட் மோனோஹைட்ரேட் உள்ளிட்ட பல வைட்டமின்களும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன என்று டான் நாளிதழ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம்-ஐ.எஸ்.ஐ , ஜெய்ஷ்-இ -முகமது உள்ளிட்ட தீவிரவாத தாக்குதல்களை எதிர் கொண்டு வரும் போதிலும் பாகிஸ்தானுக்கு மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.