அடிவாங்கிய ஒரு வாரத்தில் இந்திய ராணுவத்திடம் கதறிய சீனா..!! எந்த நடவடிக்கையும் வேண்டாம் என கெஞ்சல்..!!

By Ezhilarasan Babu  |  First Published May 14, 2020, 10:22 AM IST

இந்த விவகாரத்தில் எந்த ஒரு சிக்கலான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் என இந்திய தரப்பை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் . எல்லைப்பகுதிகளில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை மிக அவசியம் என அவர் கூறினார் .


பாங்கோங் த்சோ ஏரி பகுதியில்  இந்திய- சீனா இராணுவத்திற்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து  இந்த பிரச்சினையை மேலும் சிக்கலாக்குவது போன்ற  எந்த நடவடிக்கையில் இறங்குவதையும்  இந்தியா தவிர்க்க வேண்டுமென சீனா கேட்டுக்கொண்டுள்ளது .  எல்லையில் அமைதியை நிலைநாட்டுவதற்கு சீனா  விரும்புகிறது எனவும் அது தெரிவித்துள்ளது.  இந்தியா-சீனா இடையே அமைந்துள்ள சுமார் 3 ஆயிரத்து 488 கிலோ மீட்டர் நீளமுள்ள எல்லைக்கோடு  விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் இருந்து வருகிறது .   இது தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் .  இந்நிலையில் லடாக் எல்லைப்பகுதியில் உள்ள பாங்கோங் த்சோ  என்ற ஏரி பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர் .  சுமார் 134 கிலோமீட்டர் நீளமுள்ள இதன் வடக்கு கரை பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு பகுதி சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது .  இதன் அருகில் இருக்கும் பல பகுதிகளுக்கு இந்தியாவும் சீனாவும் உரிமை கோரி வருகின்றன . 

Latest Videos

கடந்த புதன்கிழமை அப்பகுதியில் இருந்த சீன ராணுவத்தினர் ,  ரோந்து பணியில் ஈடுபட்ட இந்திய ராணுவ வீரர்களிடம்  தாகராறில் ஈடுபட்டு அது மோதலாக மாறியது தங்கள் பகுதியில் இருந்து இந்திய ராணுவம் உடனே வெளியேற வேண்டும் என சீன ராணுவத்தினர் கூச்சலிட்டனர் . தங்கள் எல்லைப் பகுதியிலேயே தாங்கள் இருப்பதாக இந்திய ராணுவத்தினர் தெரிவித்தனர் .  இதனையடுத்து ஏராளமான இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் இரும்பு கம்பிகள் மற்றும் தடிகளைக் கொண்டு மோதிக்கொண்டனர் .  ஒருவர் மீது ஒருவர் கல்வீசி தாக்கவும் முயன்றனர் , இதுல்  கிட்டத்தட்ட 150 க்கும் மேற்பட்ட வீரர்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதால் இரு தரப்பிலிருந்தும் குறைந்தது 10 வீரர்கள் வரை காயமடைந்தனர் . இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது , இதில்  பிரிகேடியர்   அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் தலையிட்டு நடத்திய பேச்சு வார்த்தையில் ,  இருதரப்புக்கும் இடையே பதற்றம்  தணிந்தது . 

இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல்  சீனா மௌனம் காத்து வந்த  நிலையில் ,  அந்நாட்டின் வெளியுறவுத்துறை  செய்தித்தொடர்பாளர் ஜாவோ லிஜியன்  செய்தியாளருக்கு பேட்டி அளித்துள்ளார் ,  அதில், பாங்கோங் த்சோ ஏரி பகுதியில் இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்டுள்ள திடீர் மோதல் விவகாரத்தை  மேலும் சிக்கலாக்கும் வகையில் எந்த நடவடிக்கையிலும் இந்தியா இறங்க  வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சீன தரப்பில் நடத்தப்பட்டது ஒரு சாதாரண ரோந்து என அவர் விளக்கமளித்துள்ளார்,   இந்தியாவுடன் சீன மக்கள் விடுதலை ராணுவம் மோதல் போக்கை  மேற்கொண்டிருப்பது  சீனாவிலிருந்து பல தொழில் நிறுவனங்கள் இந்தியாவுக்கு இடம்பெயரப் போகிறது என்ற கருத்துடன் தொடர்புடையதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த  அவர் இருநாடுகளுக்குமே அதில் மறைமுக ராஜதந்திர நடவடிக்கைகள் உள்ளது என அவர் ஒப்புக்கொண்டார் .

 

எல்லை பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு நிலையானது மற்றும் தெளிவானது எல்லை படையினர் எல்லைப்பகுதியில் அமைதியையும் சமாதானத்தையும் நிலைநாட்டி வருகின்றனர் சீன கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் சீனா சாதாரண ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது ,  ஆகவே சீனாவுடன் இணைந்து பணியாற்றவும்  இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு உதவும் நிலைமைகளை உருவாக்கவும் வேண்டும் .  ஆகவே இந்த விவகாரத்தில் எந்த ஒரு சிக்கலான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் என இந்திய தரப்பை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் .  எல்லைப்பகுதிகளில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை மிக அவசியம் என அவர் கூறினார் . சமீபத்தில் நடந்த இந்த சம்பவத்தை அடுத்து அங்கு உள்ள சீன படையினர்  அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்த உறுதிபூண்டு உள்ளனர் .  தற்போது உலகில் மிக முக்கியமான பிரச்சனை கொடிய கொரோனா வைரசுக்கு எதிராக போராட்டமாக உள்ளது .

இதற்கிடையில் அதிக வேறுபாடுகள் அல்லது மோதல்களை உருவாக்கும்  எந்த ஒரு அரசியல் சூழ்நிலைகளையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று அவர் கூறியுள்ளார். இந்தியா சீனாவிற்கு இடையே மோதல் ஏற்படுவது இது முதல் முறை அல்ல ,  ஏற்கனவே  2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லடாக் பாங்காங் ஏரி  பகுதியில் இருதரப்பு வீரர்களும் கற்களை எறிந்து தாக்க முயன்றனர்.  அதன் பின்னர் சிக்கிமின் டோக்லாம் பகுதியிலும் இருதரப்பினருக்கும்  மோதல் ஏற்பட்டு பதட்டமான சூழல் உருவானது .  அதனால் இரு  நாட்டுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது குறிப்பிடதக்கது. 
 

click me!