எய்ட்ஸுக்கு காண்டம் போல... இனி கொரோனாவுக்கு முககவசம்தான் ஒரே வழி..? அதிர வைக்கும் உலக சுகாதார நிறுவனம்..!

By Thiraviaraj RMFirst Published May 14, 2020, 10:25 AM IST
Highlights

எய்ட்ஸ் நோயிருந்து தப்பிக்க காண்டம் பயன்படுத்துவதை போல கொரோனாவிலிருந்து தப்பிக்க இனி முகக்கவசம்தான் இனி எப்போதும் கைகொடுக்கும் 

எய்ட்ஸ் நோயிருந்து தப்பிக்க காண்டம் பயன்படுத்துவதை போல கொரோனாவிலிருந்து தப்பிக்க இனி முகக்கவசம்தான் இனி எப்போதும் கைகொடுக்கும் என்பதைப் போல எய்ட்ஸ் நோய் போல் கொரோனாவும் மக்களைவிட்டு வெளியேற போவது இல்லை என உலக சுகாதார அவசரகால இயக்குனர் மைக்கேல் ரியான் தெரிவித்துள்ளார். 

சீனாவில் உகான் நகரில் உருவாகி உலகமெங்கும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில்  கொரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. இந்த தொற்று, 43 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பாதித்து உள்ளதாகவும், 2 லட்சத்து 89 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்றுள்ளது. இன்னும் இந்த கொடிய நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோயின் தாக்கம் இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும், இது ஒரு சீசன் நோய் என்றும் கூறுகின்றனர். 

இந்நிலையில் பல்வேறு நாடுகள் தங்கள் அன்றாட வாழ்க்கையை மீண்டும் தொடங்கவும், முடங்கிப்போன பொருளாதாரத்தை காப்பாற்றவும் தயாராக முயன்று வருகினர. இதனையடுத்து உலக சுகாதார நிறுவனம், கொரோனா வைரஸ் மக்களிடையே தங்கி விடும் என்று கூறியுள்ளது.

ஜெனீவாவில் இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் அவசரகால இயக்குனர் மைக்கேல் ரியான் கூறுகையில், ‘’கொரோனா  வைரஸ் மனித சமூகங்களில் உள்ள மற்றொரு வைரஸாக மாறக்கூடும். இந்த வைரஸ் ஒருபோதும் இங்கிருந்து போகாது. எச்.ஐ.வி நீங்கவில்லை. ஆனால் நாம் அந்த வைரஸிலிருந்து எப்படி தப்பிப்பது என்பதை புரிந்து கொண்டோம். 

எப்படி இருப்பினும், ஊரடங்கை தளர்த்துவது கொரோனா வைரஸின் புதிய பாதிப்புகளை ஏற்படுத்துமா? இல்லையா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அபாயங்கள் அதிகமாக இருக்கிறது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம்  இன்னும் வைரஸுக்கு எதிராக நாடுகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

சுகாதாரப் பணியாளர்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைத் தாக்குதல்கள் குறித்தும் ரியான் கவலை தெரிவித்தார். கொரோனா பாதிப்பு நம்மில் மிகச் சிறந்ததை வெளிப்படுத்துகிறது, ஆனால் இது மோசமான சிலவற்றையும் வெளிப்படுத்துகிறது. முற்றிலும் உதவ முயற்சிக்கும் தனிநபர்கள் மீது தங்கள் விரக்தியை வெளியேற்ற மக்கள் அதிகாரம் பெற்றுள்ளதாக உணர்கிறார்கள். இவை புத்தியில்லாத வன்முறை மற்றும் பாகுபாடு செயல்பாடு’’என அவர் கூறியுள்ளார். 

click me!