ஆவேசத்தில் துள்ளிய பாகிஸ்தான் பிரதமர்...!! கழுவிக்கழுவி ஊத்திய சொந்தநாட்டு மக்கள்...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 24, 2020, 7:21 PM IST
Highlights

என்னைப்பற்றி வரும் தவறான அவதூறுகளையும் கருத்துக்களையும்  தெரிந்து கொள்வதை தவிர்க்க ,  டிவி பார்ப்பதையும் பேப்பர் படிப்பதையும் தவிர்த்து விட்டேன் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆவேசமாக பேசியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது 

என்னைப்பற்றி வரும் தவறான அவதூறுகளையும் கருத்துக்களையும்  தெரிந்து கொள்வதை தவிர்க்க ,  டிவி பார்ப்பதையும் பேப்பர் படிப்பதையும் தவிர்த்து விட்டேன் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆவேசமாக பேசியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது . பாகிஸ்தான் அரசியல்வாதிகள் எப்போதும் முன் கோபக்காரர்கள் எதையுமே எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவு எடுப்பவர்கள் என அவர்கள் மீது  பொதுவாக விமர்சனம் உள்ளது. இப்போது  இம்ரான்கானின் பேச்சைக் கேட்டால் அந்த   விமர்சனம் உண்மைதானோ.? என எண்ணதோன்றுகிறது. 

ஸ்விட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்று வந்த உலகப் பொருளாதார கூட்டமைப்பின் உச்சி மாநாடு நேற்றுடன்  நிறைவடைந்தது , அதில் கலந்துகொள்ள டாவோஸ் வந்திருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ,  உலக முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்கள் மத்தியில் கலந்துரையாடினார்.  அப்போது பேசிய அவர்,  நமது மூதாதையர்கள் கனவு கண்டது போல மனிதாபிமானமும் வளமிக்கதுமான பாகிஸ்தானை உருவாக்க என் தலைமையிலான அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.   அதனை நிறைவேற்றும் போராட்டத்தில் ஏற்படும் வலிகளையும் நாம் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் என்றார். சிலர் இறக்காமலே நேரடியாக சொர்க்கத்துக்கு போக வேண்டும் என ஆசைப்படுகின்றனர்.  இது ஒரு மோசமான முன்னுதாரணமாக இருக்கும்.? என ஆவேசமாக கூறுனார்.

 

பாதிக்கப்பட்ட பகுதியில் அறுவை சிகிச்சை செய்துதான் அதை அகற்ற வேண்டும் அறுவை சிகிச்சை இல்லாமல் எப்படி அது சாத்தியமாகும்.? என்ற அவர்,  பாகிஸ்தானியர்கள் பொறுமையாக இருங்கள்,  பாகிஸ்தானுக்கு வளமான எதிர்காலம் உள்ளது , நீண்ட நெடிய என் அரசியல் பொது வாழ்வில் விமர்சனங்கள் எனக்கு பழகிவிட்டது .  பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்ற ஒன்றரை ஆண்டு காலத்தில் என்னைப் பற்றி வரும் தவறான அவதூறு கருத்துக்களை விமர்சனங்களை நான் கேட்க விரும்புவது இல்லை.  அதைத் தவிர்ப்பதற்காகவே நாளிதழ்களையும் தொலைக்காட்சியும் பார்ப்பதையே தவிர்த்துவிட்டேன்  என அவர் தெரிவித்துள்ளார்.  அவரின் இக்கருத்து சொந்த நாட்டு மக்களாலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. 
 

click me!