ஊழல் பட்டியலில் இந்தியாவுக்கு கிடைத்த இடம்..!! திருந்தவே திருந்தாது இந்த நாடு...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 24, 2020, 6:56 PM IST
Highlights

 சர்வதேச அளவில் நடக்கும் ஊழல் குற்றங்கள் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டுக்கும் புள்ளிவிவரங்கள் வழங்கி அதனடிப்படையில் அப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது. 

ஊழலற்ற நாடுகளின் பட்டியலில்  78வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 80வது இடத்தை பிடித்துள்ளது ,  இது இந்தியாவுக்கு கிடைத்த பின்னடைவாகவே கருதப்படுகிறது ,   ஜெர்மனியின் பெர்லினை  தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற சர்வதேச அமைப்பு சர்வதேச அளவில் ஆய்வு நடத்தி ஊழல் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது .  சர்வதேச அளவில் நடக்கும் ஊழல் குற்றங்கள் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டுக்கும் புள்ளிவிவரங்கள் வழங்கி அதனடிப்படையில் அப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

 

உலக அளவில் நடத்தப்பட்ட  இந்த ஆய்வின் மூலம் சுமார் 180 நாடுகளிலும் ஊழல் புழக்கத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .  இந்த அடிப்படையில் 2019 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ஊழல் குறைவாக உள்ள நாடுகள் பட்டியலில் டென்மார்க் ,  நியூசிலாந்து , ஆகிய நாடுகள் முதலிடம் பிடித்துள்ளன . ஸ்வீடன் ,  சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த  இடங்களை பிடித்துள்ளன .  அதே நேரத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு 78வது  இடத்தில் இருந்த இந்தியா தற்போது 80 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது ,  இந்தியாவில் ஊழல் மலிந்து வருகிறது என்பதை இது காட்டுகிறது .

இந்தியாவில் நடக்கும் பொதுத் தேர்தல் காலத்தில் சர்வசாதாரணமாக நடக்கும் பண வினியோகம் ,  மற்றும்  பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக அரசு கொண்டு வரும் திட்டங்கள் என  இந்தியாவில் அதிகரிக்கும்  ஊழலுக்கு  முக்கிய காரணியாக கருதப்படுகிறது . அதேபோல் ஊழலில்  87 ஆவது இடத்தில் இருந்த சீனா தற்போது 80வது  இடத்திற்கு முன்னேறியுள்ளது .  இந்த பட்டியலில் அதிக ஊழல் நடக்கும் நாடாக வறுமை தலைவிரித்தாடும் சோமாலியா கடைசி இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது .

click me!