இந்தியாவிற்கு சொந்தமான போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய விமானப் படை வீரர்களுக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் மிக உயரிய விருது
அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அபிநந்தனுக்கு வழங்கியதால் ஏட்டிக்கு போட்டியாக பாகிஸ்தான் இந்த விருதை அறிவித்துள்ளது.
இந்தியாவிற்கு சொந்தமான போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய விமானப் படை வீரர்களுக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் மிக உயரிய விருது
அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அபிநந்தனுக்கு வழங்கியதால் ஏட்டிக்கு போட்டியாக பாகிஸ்தான் இந்த விருதை அறிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி பாதுகாப்பு படை வீரர்களை குறிவைத்து பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி நடத்திய தற்கொலை படைத்தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படையினர் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்தது.
இதைத்தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 27-ம் தேதி இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப்படையின் எப்-16 போர் விமானம் அத்துமீறி நுழைந்தது. அதைத் தொடர்ந்து, இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் போர் விமானங்களை, இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் விரட்டியடித்தன. அதில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இதனிடையே, அவருடைய விமானத்தை பாகிஸ்தான் ஏவுகணை தாக்கியதில் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பகுதியில் குதித்தார். அவரை சிறைப்பிடித்த பாகிஸ்தான் ராணுவம், பின்னர் விடுவித்தது. அவருக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டது. இதேபோல், இந்தியாவுக்கு போட்டியாக அபிநந்தனின் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் விமானப் படை விங் கமாண்டர் முகமது நெளமன் அலிக்கு அந்நாட்டு ராணுவத்தின் உயரிய விருதான சிதார்-இ-ஜூரத் வழங்கப்படுகிறது. இந்த விருதுகள், அடுத்த ஆண்டு மார்ச் 23-ம் வழங்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நாட்டு அதிபர் ஆரிஃப் அல்வி நேற்று வெளியிட்டார்.