பாகிஸ்தானில் களமிறங்கிய சீன மருத்துவர்கள்..!! மருந்து கொடுத்த இந்தியாவை என்னன்னு கூட கேக்கல..!!

By Ezhilarasan Babu  |  First Published Apr 6, 2020, 4:42 PM IST

அதேபோல் கொரோனா  வைரஸ் அறிகுறிகள் அவ்வளவு  எளிதில் தென்படாது , அப்படி வைரஸ் தாக்கினாலும்  நோய் எதிர்ப்பு சக்தியுடன் உள்ள நபர்கள் விரைவில் அதிலிருந்து குணமடைவார்கள், 
 


கொரோனா வைரஸ் பாகிஸ்தானில் தீவிரமடைந்துள்ள நிலையில் ,  பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சீன மருத்துவ  குழுவினர் பாகிஸ்தானில் முகாமிட்டுள்ளது.  இந்நிலையில் பாகிஸ்தானில் மேலும் 28 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் படி அம்மருத்துவ குழுவினர் எச்சரித்துள்ளனர் . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது . இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் தற்போது வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது இதுவரை  பாகிஸ்தானில்  3277 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் . இந்நிலையில் சீன மருத்துவ குழுவின் தலைவர் டாக்டர் ,  மேமிங் ஹோய்,  பாகிஸ்தான் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தியுள்ளார் ,  குறிப்பாக கொரோனா  வைரஸ் வெப்ப காலத்தில் பரவாது என அதை நிராகரிக்க முடியாது என தெரிவித்துள்ளார் . 

Latest Videos

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சீன மருத்துவ குழு  கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில முதலமைச்சர் ஒஸ்மான் புஸ்தரை சந்தித்தது .  அப்போது கொரோனா வைரஸில் இருந்து மக்களை காப்பாற்ற சமூக தொலைதூர நடவடிக்கைகள் முக்கிய பங்கு வகிக்க கூடும் என சீன மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர் ,  அதேபோல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை வீட்டிலேயே வைப்பதற்கு பதிலாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் ,  அல்லது தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார் .  மோசமான சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற பிளாஸ்மாவை பயன்படுத்துவது நன்மை பயக்கும் என்று சீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .  அதேபோல பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தங்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள மூன்று வகை வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் நல்ல பலன் அளிக்கும் என்றும் பரிந்துரைத்துள்ளனர். அதேபோல் கொரோனா  வைரஸ் அறிகுறிகள் அவ்வளவு  எளிதில் தென்படாது , அப்படி வைரஸ் தாக்கினாலும்  நோய் எதிர்ப்பு சக்தியுடன் உள்ள நபர்கள் விரைவில் அதிலிருந்து குணமடைவார்கள், 

வயதானவர்களுக்கும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மட்டுமே  அது ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர் .இந்நிலையில் சீன மருத்துவர் குழு தெரிவித்துள்ள அனைத்து அறிவுரைகளையும் ஏற்று உடனே வேண்டிய ஏற்பாடுகளை செய்ய பஞ்சாப் மாநில அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.  இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாநில முதலமைச்சர் புஸ்தர் பாகிஸ்தானில் உள்ள  நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சீன மாதிரியை நடைமுறைப்படுத்தவும்  அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார் .  சீன மருத்து குழு பாகிஸ்தானுக்கு வந்துள்ளதை அடுத்து சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு எவ்வளவு வலிமையானது என்பது ,  இதன் மூலம் தெரிகிறது .  எப்போதெல்லாம் பாகிஸ்தான் நெருக்கடியில் இருக்கிறதோ அப்போதெல்லாம் சீனா பாகிஸ்தானை கைகொடுத்து தூக்கி நண்பனாக உள்ளது எனவும்,  சீனா பாகிஸ்தான் நெருங்கிய  நண்பன் என மாநில முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

click me!